Home Local news பொருளாதார நெருக்கடியால் அரச ஊழியர்களே பெரிதும் பாதிப்பு’ அரச பொது சேவைகள் சங்கத்தின் செயலாளர் காட்டம்...

பொருளாதார நெருக்கடியால் அரச ஊழியர்களே பெரிதும் பாதிப்பு’ அரச பொது சேவைகள் சங்கத்தின் செயலாளர் காட்டம் !!

Public Servants Greatly Affected by the Economic Crisis’ Secretary General of the Public Service Union !!

A. Buhathu, General Secretary of the Sri Lanka Government Public Services Association, said that civil servants were the worst affected by the severe economic crisis in Sri Lanka.

He was addressing a meeting of members of the Central Committee of the Thai Sangam in the Ampara district of the Sri Lanka Government Public Services Association.

Commenting further, he added: The country has gone bankrupt due to the improper economic policy and administrative performance of the current government.

There has been an unprecedented shortage of all essential and luxury goods, including sugar, rice, palm oil, wheat flour, gas and fuel, and prices have risen by two per cent.

This has created a situation where all the people of the country have to take to the streets and fight. Even ordinary people living without any income can be seen wandering around wanting to get goods at any cost.

READ MORE >>>  கொவிட் மரணங்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கின்றன.

Even so, owning one is still beyond the reach of the average government employee. The monthly salary paid to civil servants is not enough to cover even ten days.

Ten days after receiving the salary, they are unable to get these items even on credit. This government has deceived the public servants by giving them just Rs.

And it is a pity that the salaries of public servants have not been increased by even 0.2 per cent, even though the prices of all commodities have increased by one hundred and two hundred since this government came to power.

Therefore, he said, all civil servants should come forward to fight against the government.

Public Servants Greatly Affected By The Economic Crisis
பொருளாதார நெருக்கடியால் அரச ஊழியர்களே பெரிதும் பாதிப்பு’ அரச பொது சேவைகள் சங்கத்தின் செயலாளர் காட்டம் !!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக ஏனைய மக்களை விட அரச ஊழியர்களே பெரிதும் பாதிப்படைந்துள்ளனர் என்று இலங்கை அரசாங்க பொதுச் சேவைகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஏ புஹாது தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்க பொதுச் சேவைகள் சங்கத்தின் அம்பாரை மாவட்டத்தில் உள்ள தாய்ச் சங்க மத்திய குழு உறுப்பினர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

READ MORE >>>  யாழ்ப்பாணம் சோமசுந்தரம் அவனியூ பகுதியில் வயோதிப பெண் அடித்துக்கொலை

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் அவர் மேலும் கூறியதாவது:

தற்போதைய அரசாங்கத்தின் முறையற்ற பொருளாதாரக் கொள்கை மற்றும் நிர்வாக செயற்பாடு காரணமாக இந்த நாடு வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது.

சீனி, அரிசி, பால்மா, கோதுமை மா, எரிவாயு மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய மற்றும் ஆடம்பர பொருட்கள் அனைத்திற்கும் என்றுமில்லாத அளவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் விலைவாசியும் இருநூறு வீதத்தால் அதிகரித்துள்ளது.

இதனால் நாட்டு மக்கள் அனைவரும் வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

எத்தகைய வருமானமுமின்றி வாழ்கின்ற சாதாரண மக்கள் கூட என்ன விலை கொடுத்தாலும் பொருட்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று முண்டியடித்துக்கொண்டு அலைமோதும் நிலைமையை காணக்கூடியதாக உள்ளது

இருந்த போதும் அரச ஊழியர்களோ அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற மாதாந்த வேதனத்தைக் கொண்டு தற்போதைய வாழ்க்கைச் செலவை ஈடுசெய்ய முடியாது தத்தளிக்கின்றனர்.

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஊதியம் பத்து நாட்களுக்கு கூட செலவு செய்ய போதாதுள்ளது.

சம்பளம் பெற்றதில் இருந்து பத்து தினங்களுக்குப் பின்னர் வேறு வழியின்றி கடனுக்கு கூட இப்பொருட்களை பெற்றுக்கொள்ள முடியாது திண்டாடுகின்றனர்.

விலைவாசி அதிகரிப்பு வாழ்க்கைச் செலவு உயர்வுக்கு ஏற்ப அரச ஊழியர்களின் சம்பளத்தை 18,000 ரூபாவால் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்த போதும் ஊனமுற்றவர்களுக்கு வழங்கப்படும் வெறும் ஐயாயிரம் ரூபாயை அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவாக வழங்கி இந்த அரசு ஏமாற்றியுள்ளது

மேலும் இந்த அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் அனைத்து பொருட்களின் விலைவாசியும் நூற்றுக்கு இருநூறு வீதத்தால் அதிகரித்துள்ள போதும், அரச ஊழியர்களின் சம்பளம் 0.2 வீதத்தால் கூட அதிகரிக்கப்படவில்லை என்பது வேதனைக்குரிய விடயமாகும். எனவே அரசாங்கத்துக்கு எதிராக அரச ஊழியர்கள் அனைவரும் அணிதிரண்டு போராட முன்வர வேண்டும் என தெரிவித்தார்.

READ MORE >>>  ஆலயத்தில் திருட்டில் ஈடுபட்ட 09 பெண்களுக்கும் விளக்கமறியல் நீடிப்பு
more news… visit here
READ MORE >>>  ஜனாதிபதி கடத்தப்பட்டாரா? பௌத்த தேரர் வெளியிட்டுள்ள தகவல்;
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  இராணுவத்திற்கு வந்த புதிய கட்டுப்பாடு;
Previous articleமன்னாரில் இருந்து இந்தியா சென்ற இளம் குடும்பத்தின் உறவினர்கள் – நண்பர்களுக்கு அச்சுறுத்தல்
Next article