கன்னட நடிகரான யாஷ் நடிப்பில் வெளியாகியிருந்த திரைப்படம் தான் Kgf 2., இப்படத்தினை பிரசாந்த் நீல் இயக்கியிருந்ததோடு கடந்த மாதம் 14ம் திகதி இப்படம் வெளியாகி ரூ. 1000 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி வருகிறது,
இந்த திரைப்படம் உலகம் முழுவதும் தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது.வெளியான நாள் முதல் படத்தின் வசூலுக்கு எந்த குறையும் இல்லை. சொல்லப்போனால் அந்தந்த மொழிகளின் நடிகர்களின் பட சாதனைகளையே Kgf 2 முறியடித்து வருகிறது.
இப்படி படம் வசூல் வேட்டை நடத்துவதால் கொண்டாட்டத்தில் இருந்த படக்குழுவினருக்கு ஒரு அதிர்ச்சி செய்தி. அதாவது இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் மோகன் ஜுனேஜி உயிரிழந்துள்ளார். அவரது மரண செய்தி படக்குழுவை தாண்டி ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
அத்தோடு இவரது இறப்பிற்க ரசிகர்கள் பலரும் தமது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.