அண்மைக்காலமாக பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்படும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சுமார் 500 கோடிக்கு மேல் வசூலித்து புதிய சாதனை படைக்கிறது அந்த வகையில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவான கே ஜி எஃப் முதல் பாகம் ஏற்கனவே சூப்பர் ஹிட் அடுத்த நிலையில் இரண்டு வருடங்கள் கழித்து அதன் இரண்டாவது பாகமும் வெளியானது.
KGF 2 திரைப்படம் முந்தைய படத்தை விட இந்த படத்தில் மாஸ் சீன்கள், ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்தும் பிரமாதமாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற கூட்டம் கூட்டமாக இந்த படத்தை பார்த்து கொண்டாடினர் படமும் நாளுக்கு நாள் வசூல் அதிகரித்துக் கொண்டே போனது.
குறிப்பாக தமிழகத்தில் மட்டும் கேஜிஎப் 2 திரைப்படம் 100 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் 1000 கோடிக்கு மேல் தாண்டி புதிய சாதனை படைத்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் பிரசாந்த் நீல் தெலுங்கு டாப் ஹீரோ பிரபாசை வைத்து சலார் என்னும் படத்தை உருவாக்கி வருகிறார்.
அதைத்தொடர்ந்து அடுத்ததாக எந்த நடிகரை வைத்து படம் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கான பதில் கிடைத்துள்ளது. மற்றொரு தெலுங்கு டாப் ஹீரோவான ஜூனியர் என்டிஆர் அவர்களை வைத்து இதுதான் ஒரு புதிய படத்தை எடுக்கவிருக்கிறார் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.
இன்று பிறந்தநாள் காணும் ஜூனியர் என்டிஆர் அவர்களுக்கு வாழ்த்து சொல்லி விட்டு உங்களுடன் தான் அடுத்த படம் கூறி புகைப்படத்தையும் வெளியிட்டு உறுதிப்படுத்தி உள்ளார்.இ தோ நீங்களே பாருங்கள்.
??? ???? ???? ???? ?? ????? ??????????? ?? ??? ??? ?????? ?? ?????!
??? ????…. ??? ????? …..
??? ?????????? ??? ??? ?????….@tarak9999 @MythriOfficial @NTRArtsOfficial pic.twitter.com/NNSw3O9zU6— Prashanth Neel (@prashanth_neel) May 20, 2022