சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் மிகப்பெரியளவில் பேசப்பட்டவர் சிவாங்கி. தன் குரலுக்கு பாடல் பாடும் விதத்திற்கும் சம்மந்தே இல்லாத அளவிற்கு ரசிகர்களை மிகவும் ஈர்த்தவர் சிவாங்கி.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானதை விட குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக புகழ்-உடன் போட்ட அட்ராசிட்டி அவரை இந்த இடத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இதனால் ஒருசில ஆல்பம் பாடல்களிலும் பாடி இருக்கிறார் சிவாங்கி.சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் டான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நேற்று டான் படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில், சிவாங்கியின் நடிப்பு சிலருக்கு வெறுப்பை ஏற்றியுள்ளதாக கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
அதில் ஒரு ரசிகர்கள் அடுத்த படத்தில் சிவாங்கியை பார்த்தால், அது லூசு, குரங்கு, பாட சொல்லுங்க ரொம்ப பிடிக்கும், ஆனால் நடிக்க வேண்டாம்னு சொல்லுங்க என்று படுமோசமாக விமர்சித்துள்ளார். இது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
#Sivangi Korangu, Paithiyam – Fan After Watching #Don Movie pic.twitter.com/L2P09dcO2R
— chettyrajubhai (@chettyrajubhai) May 13, 2022