இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பீஸ்ட். இந்தத் திரைப்படத்தின் ட்ரெய்லர் கடந்த 2ம் திகதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதோடு மில்லியன் கணக்கான பார்வையாளர்களை குவித்து வருகின்றது.
அத்தோடு இந்தத் திரைப்படம் எதிர்வரும் 13ம் திகதி வெளியாகவுள்ளதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு காணப்படுகின்றது. தற்பொழுது இப்படத்திற்கான புரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றது.
பீஸ்ட் படத்தின் ட்ரைலர் வெளியானத்தில் இருந்தே ‘கூர்கா 2, Money Heist’ போன்ற படங்களுடன் ஒப்பிட்டு பல மீம்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இப்படி ஒரு நிலையில் பீஸ்ட் திரைப்படத்தை கூர்கா படத்துடன் ஒப்பிட்டு கேட்ட கேள்வியால் நழுவி சென்றுள்ளார் யோகி பாபு. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். மேலும் இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபீஸில் இடம்பெறும். கடைசியாக விஜய்யின் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது.
மேலும் இந்த படத்தை தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கின்றது.இவர்களுடன் இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார்.
அத்தோடு இந்த படத்தின் அரபிக்குத்து பாடல் வெளியானதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகின்றது. இதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டு பாடல்கள் கூட வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படி ஒரு நிலையில் பீஸ்ட் படத்தின் ட்ரைலர் வெளியானதில் இருந்தே இந்த படத்தில் Money Heist, குர்கா போன்ற படங்களுடன் ஒப்பிட்டு வருகின்றனர்.
ஷாப்பிங் மாலை ஹைஜாக் செய்யும் தீவிரவாதிகளிடம் இருந்து மக்களை காப்பற்றும் ஹீரோவின் கதை தான் பீஸ்ட். எனினும் இதே பாணியில் தான் யோகி பாபு நாயகனாக நடித்த ‘கூர்கா’ படத்தின் கதையும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த படத்தின் ட்ரைலர் வெளியான போதே ட்விட்டரில் ‘கூர்கா2’ என்ற ஹேஸ் டேக்கும் ட்ரெண்டிங்கில் வந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த சர்ச்சை குறித்து யோகி பாபுவிடம் சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்கப்பட்டுளது.
சமீபத்தில் யோகி பாபு மற்றும் எம் எஸ் பாஸ்கர் ஆகியோருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு இருந்தது. அத்தோடு டாக்டர் பட்டத்தை பெற்ற பிறகு பத்திரிகையாளரை சந்தித்த யோகி பாபுவிடம் பீஸ்ட் படம் குறித்து கேட்கப்பட்டது. இதற்கு யோகி பாபு, நீங்க உள்ள வரும் போதே தெரியுமென்று நைஸ்சாக நழுவ பார்த்தார். எனினும் இதன் பின்னர் எப்பயும் போல தான் விஜய் சார் படம் என்றாலே ஹிட்டு தான் பாருங்க என்று பதிலளித்துவிட்டு சென்றார்.
#Yogibabu Funny Reply On #Beast And #Gurkha2 Troll ??? pic.twitter.com/qOqRSXazQ8
— chettyrajubhai (@chettyrajubhai) April 10, 2022
பின்னர் பத்திரிகையாளர் ஒருவர், பீஸ்ட் படத்தை கூர்கா படத்துடன் ஒப்பிட்டு Troll செய்வது குறித்து கேட்டிருந்தார். இதற்கு பதில் கூறாமல் யோகி பாபு செல்ல, அவருடன் இருந்த நபர் ‘அண்ணே, அண்ணே கோர்த்துவிட்ருவாங்கன்னே’ என்று யோகி பாபுவை அழைத்து சென்றுவிட்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.