Home Local news P2P விவகாரம்!! STF பாதுகாப்பை மீளப்பெற்ற அரசு!?

P2P விவகாரம்!! STF பாதுகாப்பை மீளப்பெற்ற அரசு!?

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப் படை மீளப்பெறப்பட்டுள்ளது.

“நேற்றிரவு கிடைத்த திடீர் பணிப்பில் சிறப்பு அதிரடிப் படை பாதுகாப்பு மீளப்பெறப்பட்டுள்ளது. காரணம் அறிவிக்கப்படவில்லை” என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

சிறப்பு அதிரடிப் படையினரை வைத்து பேரணியில் பங்கேற்றமை உள்ளிட்ட சில நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கு இவ்வாறு மீளப்பெற்றுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் பிரமுகர் பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர்கள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு பாதுகாப்பு கடமையில் இருப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  கைத்துப்பாக்கி மீட்பு ! சந்தேக நபர் கைது