Home Local news முடங்க போகும் யாழ்ப்பாணம்!! கலங்க போகும் சிங்களம்

முடங்க போகும் யாழ்ப்பாணம்!! கலங்க போகும் சிங்களம்

பொத்துவில் முதல் பொலிகண்டி பேரணி முடிவில் வரலாறு சொல்லும் வகையில் ஒரணியில் யாழில் தமிழர்கள் அணிதிரளுங்கள் என தமிழர் சம உரிமை இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.

ஆன்மீக, சமூக, அரசியல் தலைவர்கள் உட்பட பல்லாயிரக் கனக்கான மக்கள் கடந்த நான்கு நாட்களாக தமிழர் தாயகத்தின் தென்முனை பொத்துவிலில் ஆரம்பித்து உணர்வு எழுச்சி பேரணியாக பல நூற்றுக்கணக்கான மைல்கள் பங்கு கொண்டுள்ளனர்.

பல்வேறுபட்ட இடர் நிலைகளையும் தாண்டி இப்பேரணி மகத்தான மக்கள் திரளுடன் நேற்று இரவு கிளிநொச்சியை வந்ததடைந்து இருக்கின்றது.

கிழக்கிலும் வவுனியா மன்னார் மாவட்டங்களிலும் சகோதர தமிழ் பேசும் மக்களும் அணிதிரண்டு பேரணிக்கு வலுச் சேர்த்து இருக்கின்றார்கள்.

தற்போது தமிழர்கள் முற்று முழுதாக வாழும் யாழ்ப்பாணமும் கிளிநொச்சி மிகப்பெரிய மக்கள் வெள்ளத்தை ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரலாக உலகிற்கு காட்ட வேண்டியது வரலாற்றுக் கடமையாகும்.

இன்று எம் இனத்தின் பூர்வீக மரபுரிமைகள் அனைத்தும் கபளீகரம் செய்யப்பட்டு கொண்டு அனைத்து அடிப்படை உரிமைகளும் மறுக்கப்பட்டு அரசியல் கைதிகள் தொடர்ந்தும் சிறையில் வதைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இவற்றுக்காக அணி திரண்டு இரவு பகல் பாராது வந்து கொண்டிருக்கும் எமது அன்புக்குரிய உறவுகளின் உணர்வு உச்சம் தொட்டு நிற்கின்றது.

இந்த தருணத்தில் இந்த உணர்வுகளுக்கு தியாகங்களுக்கு மதிப்பளித்து தாங்களால் முடிந்த அனைத்து தமிழர்களும் யாழ் – கிளிநொச்சி வீதிகளில் இறங்கி ஒட்டுமொத்த குரலையும் அடக்குமுறைக்கு எதிராக ஒலிக்க விட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இந்த வரலாற்று கடமையை செய்ய அனைவரும் அனைத்து வேறுபாடுகளையும் கடந்து இன்று அணி திரள்வோம்.

READ MORE >>>  கண்டுபிடிக்கப்படாத சிறுமி விவகாரம்; இன்று ஊடக சந்திப்பினை மேற்கொண்ட தாயார்.

காலை 7 மணிக்கு கிளிநொச்சி நகரிலோ அல்லது பின்னர் பளை, சாவகச்சேரி ,யாழ் நகரிலோ முடிந்த இடங்களில் இணைந்து பொலிகண்டியில் விண்ணதிர வட -கிழக்கு, மலையக தமிழர்களும் சகோதர தமிழ் பேசும் மக்களும் உலகிற்கு எம் மனக்காயங்களை வெளிப்படுத்துவோம். ஒற்றுமையே பலம் ஒரணியில் திரள்வோம். – தமிழர் சம உரிமை இயக்கம். என கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாணத்திற்குள் நுளையும் பேரணிக்குள் சில காவாலிகளை ஊடுருவ செய்து பொலிசார், மற்றும் இராணுவம் மீதும், பொது சொத்துக்களை சேதப்படுத்தும் நோக்கிலும், முக்கிய அரசியல்வாதி ஒருவரின் பின்னணியில் சதி திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது என குறித்த அரசியல்வாதியின் கீழ் பணியாற்றும் சமுதாய அக்கறை கொண்ட இளைஞர் ஒருவர் தனது சொந்த முகநூலினூடாக எமக்கு தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

எனவே, அனைத்து உறவுகளும் அமைதியான முறையிலே குறித்த போராட்டத்தை முன்னெடுத்து செல்லுங்கள், உள்ளே நுளைந்து கலகம் விளைவிக்க முயலும் கறுப்பாடுகளை இனம்கண்டு சல்லடையாக்கி கொள்ளுங்கள் என வேண்டுகின்றோம்.

எக்காரணம் கொண்டும் அகிம்சை வழி போராட்டத்தை கலக போராட்டமாக மாற்ற எவனிற்கும் இடம்கொடுத்து விடாதீர்கள்.வரலாறு படைக்க போகும் இப்போராட்டத்திற்கு எல்லா உறவுகளும் வலு சேருங்கள். கறுப்பாடுகளை இனம்காட்டுவது எமது பொறுப்பு. வெற்றி நிச்சயம்.

தமிழர் தாயகத்தின் 7 மாவட்டங்களின் வலிகளை, கதைகளை, போராட்டங்களை சுமந்து இறுதியாக யாழ்ப்பாணம் வரும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியை யாழ்ப்பாணத்தவர்களே வரவேற்க தயாராகுங்கள்.

வீட்டு வாசலில் இராணுவம் நிற்க வீட்டுக்குள் தமிழர் தேசத்தின் தளபதிகளை, போராளிகளை வைத்திருந்து பாதுகாத்து தந்தவர்கள் தான் இந்த யாழ்ப்பாணத்தவர்கள். இனியும் பயந்து நிற்காமல் யாழ்.நகர் வந்து பேரணியோடு இணைந்து போராடுங்கள்.

READ MORE >>>  நித்திரை தூக்கத்தால் மகிழுந்து விபத்து

இன்று ஒருநாளாவது வெளியில் வந்து உங்கள் தேசத்தின் வலிகளை, கதைகளை கேழுங்கள். அவர்களுக்காகவும், உங்களுக்காகவும் போராடுங்கள்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

Previous articleSrilanka Railway Department Vacancy
Next articleஎப்படி இந்த அதிசயம் நிகழ்கிறது?