Home Indian news மேட்ச் விண் பண்றதுல வேணா நீங்க கில்லியா இருக்கலாம். ஆனா உங்க ஊரு பொண்ண கரெக்ட்...

மேட்ச் விண் பண்றதுல வேணா நீங்க கில்லியா இருக்கலாம். ஆனா உங்க ஊரு பொண்ண கரெக்ட் பண்றதுல நாங்கதான் கில்லி. தெரியும்ல

இதுதான் அவுஸ்திரேலியா Proud to be an Australian !!

காதலன் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட இளைஞன் காதலி அவுஸ்திரேலிய இளம் யுவதி. காதலன் இந்தியக் கிரிக்கெட் அணியின் ஆத்ரவாளன் காதலி அவுஸ்திரேலியக் கிரிக்கெட் அணியின் ஆதரவாளர்.

இருவரும் இந்திய அவுஸ்திரேலியக் கிரிக்கெட் போட்டிக்கு வருகிறார்கள் அங்கே காதலியிடம் தான் அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் அதற்கான அவளின் சம்மதத்தை அவன் கேட்கிறான் அதற்கு அவள் சம்மதிக்கிறாள்.

இந்த உண்மையான காட்சியை அவுஸ்திரேலியத் தொலைக்காட்சியான ஃபொக்ஸ்ரெல் படம்பிடித்து உடனேயே மைதானத்திலுள்ள பெரிய திரையில் காட்சியாக்குகிறது இதைப்பார்த்து அந்த மைதானமே மகிழ்ச்சி ஆரவாரம் செய்கிறது.

இதிலே முக்கியமாக நான் ரசித்தது என்னவென்றால் அந்தப் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த அவுஸ்திரேலிய வீரர்களும் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்தது.

குறிப்பாக அவுஸ்திரேலிய வீரர் கிளன் மக்ஸ்வல் மைதானத்தில் நின்றபடியே பெரிய திரையை ஆவலுடன் பார்த்து மனமார சிரித்தபடி கைதட்டி ஆரவாரித்ததுதான், இதற்குக்காரணமாக அவரும் ஒரு இந்தியப் பெண்ணைக் காதலித்து மணமுடித்ததாக இருக்கலாம்.

இதுதான் அவுஸ்திரேலியா. இங்கு பெரும்பாலான மக்கள் மக்களாக மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். அவர்கள் தாங்கள் விரும்பிய துணையைத் தேர்ந்தெடுக்க மனத்தை மட்டுமே பார்க்கிறார்கள், மனிதருள் வித்தியாசங்கள் பார்ப்பதில்லை. காட்டுமிராண்டித்தனமான மதம் நிறம் மொழி பார்ப்பதில்லை.

மனிதர்களின் தனிமனித சுதந்திரத்தை மதிக்கும் இந்த நாட்டில் இந்த நாட்டவனாக வாழ்வதில் மிகவும் பெருமைப்படுகிறேன்.

இந்த இடத்தில் காதல் கோட்டையில் அண்ணன் அகத்தியன் காட்சிப்படுத்திய பாடலொன்றை நினைவிற் கொள்கிறேன்

காலமெல்லாம் காதல் வாழ்க , ஜாதி இல்லை பேதமில்லை சீர்வரிசை தானோயில்லை காதல் ஆதி இல்லை அந்தம் இல்லை ஆதம் ஏவாள் தப்புமில்லை காதல் ஊரென்ன பேரென்ன தாய் தந்தை யார் என்ன காதல் வந்து சேரும்
நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை காதல் மனம் வாழும் ஜாதகங்கள் பார்ப்பதில்லையே அது காசு பணம் கேட்பதில்லையே

READ MORE >>>  விக்னேஷ் சிவனுக்கு புது பட்டம் சூட்டினார் நயன்தாரா!

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

Previous articleயாழில் வேலியை கொளுத்திய பொலிஸார்..! இளைஞர்கள் கூடியதால் ஓட்டம்
Next articleமாமியார் வீட்டுக்கு அடிக்கடி வந்த சுரேஷ்!! எச்சரித்த மருமகன் மீது கத்தி குத்து!