Home Local news யாழில் மூவரிற்கு கொரோனா தொற்று!!

யாழில் மூவரிற்கு கொரோனா தொற்று!!

யாழில் 70 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

நவம்பர் மாதத்தில் மட்டும் யாழ்ப்பாணத்தில் 6 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

“யாழ்ப்பாணம் கோயில் வீதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு கடந்த 11ஆம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டியிலிருந்து வருகை தந்த அவர் கிளிநொச்சிக்கும் வான் ஒன்றில் சென்று வந்துள்ளார்.

அவர் கொழும்பிலிருந்து வருகை தந்தமை அறிவிக்கப்படாத நிலையில் கடந்த 15ஆம் திகதி சுகாதாரத் துறையினர் கண்டறிந்து அவரைத் சுய தனிமைப்படுத்தினார்கள். அவருடன் வீட்டில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அவரிடம் மாதிரிகள் பெறப்பட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் நேற்று 121 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது. அவர்களில் காங்கேசன்துறை கடற்படை முகாமில் பணியாற்றும் இரண்டு கடற்படையினருக்கும் கோரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ஏனையோருக்கு தொற்று இல்லை” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அடையாளம் காணப்பட்டுள்ள வயோதிபப் பெண்ணுடன் வீட்டில் இருவர் சுய தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களுக்கான பிசிஆர் பரிசோதனைகள் அடுத்து வரும் நாள்களில் முன்னெடுக்கப்படும் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  செல்வச்சந்நிதி ஆலய சூழலில் கடை நடத்துவோரில் இருவருக்கு கொரோனா தொற்று
Previous articleமாணவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகக்கூடிய நிலை ஏற்படுகிறதா?! வெளியாகியுள்ள தகவல்…..
Next articleமாஸ்கை கழற்றி விட்டு பெண்ணை மூர்க்கத்தனமாக தாக்கிய அதிகாரி!