Home Local news கொவிட் மாத்திரை விற்பனைக்கு அனுமதி மறுப்பு!

கொவிட் மாத்திரை விற்பனைக்கு அனுமதி மறுப்பு!

கொவிட் மாத்திரையினால் ஏற்படும் அதிகளவில் பக்கவிளைவுகள் ஏற்படும் என தெரிவித்து, இந்தியாவில் அதனை பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மெர்க் நிறுவனம் ‘மோல்னுபிராவிர்’ என்ற கொரோனா மாத்திரையை உருவாக்கியது.

இந்த மருந்து வில்லையொன்றின் விலை 35 ரூபா (இந்திய நாணய மதிப்பில்) ஆகும். ஒரு கொவிட் தொற்றாளருக்கு 5 நாட்கள் சிகிச்சையளிப்பதற்காக சுமார் 40 மருந்து வில்லைகள் தேவைப்படும் என்பதுடன், அதற்கு சுமார் 1,400 ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இந்தியாவில் இதனை விற்பனை செய்வதற்கு அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை. அமெரிக்காவில் கொவிட் தொற்றை குணப்படுத்த, மோல்னுபிராவிர் மாத்திரையின் பயன்பாட்டுக்கு அந்நாட்டு உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளதுடன் இந்த மருந்துக்கு பிரித்தானியாவிலும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த மாத்திரையினால் கிடைக்கும் நன்மைகளை விட தீமைகள் அதிகம் இருப்பதாக கூறி இந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை குறித்த மருந்துக்கு இந்தியாவில் நான்காவது முறையாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  18 லீற்றர் சமையல் எரிவாயுவை 1,150 ரூபாய்க்கு விற்பனை அமைச்சரவை அனுமதி
Previous articleதிருமணம் குறித்து பேசிய நடிகை ஓவியா;
Next articleசீனாவில் இரும்பு பெட்டிகளில் அடைக்கப்படும் மக்கள்;