Home Tamil News புதுக்குடியிருப்பில் சோகத்தினை ஆழ்த்திய மாணவனின் உயிரிழப்பு!

புதுக்குடியிருப்பில் சோகத்தினை ஆழ்த்திய மாணவனின் உயிரிழப்பு!

புதுக்குடியிருப்பில் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவன் திடீரென அஸ்மா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனை கொண்டு செல்லும் போது அங்கு உயிரிழந்த சம்பவம் புதுக்குடியிருப்பில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

11.01.2022 நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

புதுக்குடியிருப்பு 2 ஆம் வட்டாரம் கோம்பாவில்லினை வசிப்பிடமாக கொண்ட கேப்பாபிலவு அதிபர் திரு. கேதீஸ்வரன் கைவேலி கணேசா வித்தியாலய ஆசிரியை சுபாசினி தம்பதிகளின் மகனான கே.அபிசன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்

புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் தரம் 10 கல்விகற்றுவரும் மாணவன் மாலை நேர கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்ட வேளை அஸ்மா பாதிப்பிற்கு உள்ளாகி இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.

மாணவனின் இந்த உயிரிழப்பு புதுக்குடியிருப்பில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளதுடன் மாணவர்கள் மத்தியிலும் சிறந்த மாணவன் ஒருவனை இழந்துவிட்ட வேதனைக்கு இட்டுச்சென்றுள்ளது.

உயிரிழந்த மாணவன் அபிசனுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இவரின் சடலம் இன்று மாலை 4.00 மணியவில் கோம்பாவில்லில் உள்ள அவரது வீட்டில் இருந்து எடுத்து செல்லப்பட்டு புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  கொட்டகலையிலும் வெடித்தது!
Previous articleநபரை கொலை செய்து ஆணுறுப்பை துண்டித்து உட்கொண்ட ஆசிரியரால் பரபரப்பு!
Next articleகற்ப்பப்பையை அகற்றி துணியை வைத்து ஒபரேஷன் செய்ததால் பெண் உயிரிழப்பு- பருத்தித்துறையில் சம்பவம்