Home Astology இன்றைய ராசி பலன் – 12.01.2022

இன்றைய ராசி பலன் – 12.01.2022

பிலவ வருடம் மார்கழி 28 ஆம் தேதி ஜனவரி 12, 2022 புதன்கிழமை. தசமி மாலை 04.49 மணிவரை அதன் பின் ஏகாதசி. பரணி பகல் 02.00 மணிவரை அதன் பின் கார்த்திகை. சந்திரன் இன்று மேஷ ராசியில் பயணம் செய்கிறார். கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

மேஷம்
சந்திரன் உங்கள் ராசியில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன்கள் எல்லாம் வசூலாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் வெளிவட்டார நட்பு உண்டாகும். உடல் நிலை சீராகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ரிஷபம்
சந்திரன் விரைய ஸ்தானமான 12வது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று காலையிலே இனிய செய்தி வந்து சேரும். உடன் பிறந்தவர்கள் உதவியால் உங்கள் பிரச்சினைகள் குறையும். சிலருக்கு கல்வி சம்பந்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு கிட்டும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். வேலையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மிதுனம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் உள்ளவர்களின் கருத்து வேறுபாடால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் நற்பலன்கள் ஏற்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும் வருமானம் பெருகும்.

READ MORE >>>  இன்றைய ராசிபலன் - 13/11/2021, சிம்ம ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்

கடகம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு பத்தாவது வீட்டில் பயணம் செய்கிறார். மன நிம்மதி அதிகரிக்கும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிலர் புதிய வாகனம் வாங்கி மகிழ்வார்கள்.
இன்று குடும்பத்தில் உறவினர்கள் வழியில் சுப செலவுகள் உண்டாகும். பிள்ளைகள் பெருமை சேர்க்கும்படி நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.

சிம்மம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்தோடு ஈடுபடுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். எதிர்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். பூர்வீக சொத்துகளால் அனுகூலப்பலன்கள் கிட்டும்.

கன்னி
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு எட்டாவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரை நம்பி கொடுத்த பொறுப்புகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. எந்த ஒரு செயலிலும் நிதானம் தேவை. இரவு நேர பயணங்களைத் தவிர்க்கவும்.

துலாம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்ப உறவுகளுக்கு இடையே நல்ல ஒற்றுமை நிலவும். வீட்டின் பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். உடன்பிறந்தவர்களால் இல்லத்தில் மகிழ்ச்சி கூடும். சிலருக்கு உத்தியோக ரீதியான பயணங்களால் நன்மைகள் உண்டாகும்.

READ MORE >>>  குருப்பெயர்ச்சி பலன்கள்- மகர ராசி

விருச்சிகம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஆறாவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று புதிய முயற்சிகள் செய்வதற்கு அனுகூலமான நாளாகும். பிள்ளைகள் அவர்களின் பொறுப்பறிந்து செயல்படுவர். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுப முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் நீங்கும்.

தனுசு
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஐந்தாவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று வியாபார ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். கடன் பிரச்சினைகளால் மன அமைதி குறையும். பிள்ளைகள் வழியில் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

மகரம்
சந்திரன் உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் வரலாம் பேச்சில் நிதானம் தேவை. வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மனைவி வழியாக நல்லது நடக்கும். வியாபாரத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். கடன்கள் குறையும்.

கும்பம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு மூன்றாவது இடத்தில் பயணம் செய்கிறார். இன்று வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் குறைந்து எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சி ஏற்படும்.

மீனம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு இரண்டாவது வீடான குடும்ப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு எதிர்பாராத சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் தடையின்றி கிடைக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு தொழிலில் முன்னேற்றத்தை காணலாம். வராத வெளிகடன்கள் வசூலாகும். வேலையில் மேலதிகாரிகளால் அனுகூலங்கள் உண்டாகும்.

READ MORE >>>  இன்றைய ராசிபலன் - 04/11/2021, துலாம் ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்

ஏனைய தளங்களிற்கு செல்ல..

Previous articleதொலைபேசி காதலனை நம்பி வீட்டை விட்டு வெளியேறிய யாழ் யுவதி: 4 பேரால் கூட்டு வல்லுறவு என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!
Next articleஇலங்கை வரவுள்ள சீனாவின் மற்றுமொரு கப்பல்!