Home Astology இன்றைய ராசி பலன் – 09.01.2022

இன்றைய ராசி பலன் – 09.01.2022

பிலவ வருடம் மார்கழி 25 ஆம் தேதி ஜனவரி 09, 2022 ஞாயிற்றுக்கிழமை. சப்தமி பகல் 11.09 மணிவரை அதன் பின் அஷ்டமி. உத்திரட்டாதி பகல் 07.10 மணிவரை அதன் பின் ரேவதி. சந்திரன் இன்றைய தினம் மீன ராசியில் பயணம் செய்கிறார். சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

மேஷம்
சந்திரன் இன்றைய தினம் 12ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்தால் மட்டுமே வெற்றி காண முடியும். சுப காரியங்களில் இடையூறுகள் ஏற்படலாம். தொழிலில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். திடீர் செலவுகள் வரும். இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்தால் மட்டுமே வெற்றி காண முடியும். தொழிலில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும்.

ரிஷபம்
சந்திரன் லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் குறையும்.
உடல் ஆரோக்கியத்தில் அக்கறைத் தேவை.

மிதுனம்
சந்திரன் தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று இல்லத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகள் பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்வார்கள். எதிர்பார்த்த நல்ல செய்திகள் கிடைக்கப்பெற்று மனம் ஆனந்தப்படுவார்கள். பெண்களின் மகிழ்ச்சி அதிகரிக்கும். பழைய கடன்கள் வசூலாகும்.

READ MORE >>>  இன்றைய ராசிபலன் - 02/11/2021, மேஷ ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்

கடகம்
சந்திரன் இன்று ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கும். பணவரவு நன்றாக இருக்கும். செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் சந்திப்பு வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

சிம்மம்
சந்திரன் இன்று எட்டாம் வீட்டில் அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் மன உளைச்சலுடன் காணப்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.

கன்னி
சந்திரன் ஏழாவது வீட்டில் அமர்ந்து உங்களைப் பார்வையிடுகிறார். இன்று வீட்டில் பிள்ளைகளால் சுபசெலவுகள் ஏற்படும். நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வேலை தேடுபவர்களுக்கு வெளியூரில் இருந்து புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் விலகி வருமானம் அதிகரிக்கும்.

துலாம்
சந்திரன் உங்கள் ராசிக்கு ஆறாவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை அமோகமாக இருக்கும். பிள்ளைகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். தொழிலில் பணியாட்களின் ஒத்துழைப்போடு எதிர்பார்த்த லாபங்களை அடைவீர்கள். உறவினர்கள் வழியில் நல்ல செய்தி தேடி வரும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.

விருச்சிகம்
சந்திரன் உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். சுபகாரிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உறவினர்கள் உதவியால் பொருளாதார நெருக்கடிகள் குறையும். பயணங்களால் பாதிப்பு வரலாம் தவிர்க்கவும். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை எதிர்பாராத மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும்.

READ MORE >>>  இன்றைய ராசிபலன் - 08/07/2021

தனுசு
சந்திரன் நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் எதிர்பாராத திடீர் விரயங்கள் ஏற்படலாம். மன நிம்மதியில் பாதிப்பு வரலாம். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

மகரம்
சந்திரன் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் இருக்கும். பெண்கள் புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். கடன் பிரச்சினைகள் தீரும். சேமிப்பு உயரும்.

கும்பம்
சந்திரன் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் எல்லாம் வெற்றி அடைய உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் வீடு தேடி வரும்.

மீனம்
சந்திரன் உங்கள் ராசிக்குள் பயணம் செய்கிறார். இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு கிட்டும். சுபகாரியங்கள் கைகூடி வரும்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

Previous articleஇளம் ஜோடிகள் செய்த முகம்சுழிக்க வைக்கும் செயல்
Next articleஎரிவாயு சிலின்டர்களை பெறுவதற்கு புதிய நடைமுறை