Home Local news இன்றும் மின்தடையா? – அறிவிப்பு வெளியானது.

இன்றும் மின்தடையா? – அறிவிப்பு வெளியானது.

நாட்டின் பல பகுதிகளில் நேற்றைய தினம் (07) மின்வெட்டு இடம்பெற்றிருந்த நிலையில், இன்றும் (08) நாளையும் (09) மின் விநியோக தடை இடம்பெறாது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை மின்சாரசபை இதனைத் தெரிவித்துள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் மின்சார சபைக்கு எண்ணெய் விநியோகம் முறையாக முன்னெடுக்கப்படாததால் நேற்று (07) மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையான காலப்பகுதிக்குள் 01 மணிநேர மின்வெட்டு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  கொவிட் சடலங்களை அடக்கம் செய்ய இடம் பற்றாக்குறை!; ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர்.
Previous articleநாடாளுமன்ற ஊழியர்களை சோதனை செய்ய தீர்மானம்!
Next articleஇளம் ஜோடிகள் செய்த முகம்சுழிக்க வைக்கும் செயல்