Home Ampara news புதையல் தோண்டிய நால்வர் கைது

புதையல் தோண்டிய நால்வர் கைது

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சாகாம வம்மியடி காட்டுப்பகுதியில் புதையல் தோண்டிய நால்வரைப் பொலிஸார் (06) கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்தே இக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் , மோட்டர்சைக்கிள் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் அக்கரைப்பற்று, சம்மாந்துறை, மாந்தோட்டம், வட்டினாக்கலை அம்பாறை ஆகிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  இலங்கையில் நுழைந்த ஒமிக்ரான்! நால்வர் அடையாளம்
Previous articleமியன்மாரிலிருந்து அரிசி இறக்குமதி
Next articleதேனிலவு கொண்டாட இலங்கை வந்த வெளிநாட்டு தம்பதிக்கு நேர்ந்த கதி!