Home Local news பாணை பெற்றுக் கொள்ளவும் வரிசையில் நிற்க வேண்டிய ஏற்படலாம்!

பாணை பெற்றுக் கொள்ளவும் வரிசையில் நிற்க வேண்டிய ஏற்படலாம்!

கோதுமை மா பற்றாக்குறை காரணமாக எதிர்வரும் நாட்களில் பாண் உற்பத்தியில் தட்டுப்பாடு ஏற்படும். கோதுமை மா தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு அரசாங்கம் விரைவில் தீர்வு வழங்காவிடின் பொதுமக்கள் ஒரு இறாத்தல் பாண் பெற்றுக் கொள்வதற்கும் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பேக்கரி உற்பத்தியிலான உணவு பொருட்களை தயாரிப்பதற்கு தேவையான கோதுமை மா 50 சத வீதமானளவில் கிடைக்கப் பெறுகிறது. கோதுமை பற்றாக்குறை காரணமாக பேக்கரி உற்பத்தியாளர்கள் ஒரு வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் மாத்திரம் சேவையில் ஈடுபடுகிறார்கள்.

கோதுமை மா பிரச்சினைக்கு அரசாங்கம் விரைவில் தீர்வு பெற்றுக் கொடுக்காவிடின் பால்மா, எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றை பெற்றுக் கொள்வதற்கு மக்கள் தற்போது வரிசையில் காத்திருப்பதை போன்று எதிர்வரும் நாட்களில் ஒரு இறாத்தல் பாண் பெற்றுக் கொள்வதற்கும் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  யாழில் பணம் கொடுக்க மறுத்த தாய்!! இளைஞனின் விபரீத முடிவு
Previous articleஇன்றைய ராசி பலன் – 08.01.2022
Next articleநாளாந்தம் 90,000 சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம்