Home Local news யாழ்.வைத்தியசாலையில் சிகிச்சைக்கு வந்த மூதாட்டியின் நகைகள் திருட்டு!

யாழ்.வைத்தியசாலையில் சிகிச்சைக்கு வந்த மூதாட்டியின் நகைகள் திருட்டு!

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற வந்த வயோதிப பெண்ணொருவரின் 3 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் குறித்த வயோதிபப்பெண் நேற்று (06) வியாழக்கிழமை, சிகிச்சையின் நிமித்தம், “எக்ஸ்ரே” எடுப்பதற்காக சென்ற போது, தான் அணிந்திருந்த தங்க சங்கிலி மற்றும் காப்பு ஆகியவற்றை தனது கைப்பையினுள் (Hand Bag) வைத்து சென்றுள்ளார்.

திரும்பி வந்த கைப்பையினை பார்த்த போது, அதனுள் இருந்த நகைகள் திருடப்பட்டுள்ளதை அவதானித்த அப்பெண் வைத்தியசாலை நிர்வாகத்திடம் முறைப்பாடு செய்துள்ளார்.

நிர்வாகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய வைத்தியசாலை பொலிசாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வருவோர் நகைகள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை கொண்டு வருவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு, வைத்தியசாலை நிர்வாகம் பல தடவைகள் எச்சரித்து வந்துள்ளது.

தினமும் வைத்தியசாலைக்கு பெருமளவானோர், பல்வேறு பகுதிகளில் இருந்து வருவதனால், சிகிச்சைக்கு வருவோர் தமது உடமைகளை தாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டிய தேவையுள்ளது. அதனால் பெறுமதியான உடமைகளுடன் வருவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு, வைத்தியசாலை நிர்வாகம் கோரியுள்ளது.

எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  ஓக்ஸி மீட்டருக்கு விலை நிர்ணயம்.
Previous articleவீட்டை விட்டு ஓடிய மனைவியை போஸ்டர் அடித்து தேடும் கணவர்:
Next articleஇன்றைய ராசி பலன் – 08.01.2022