Home Accident News இயங்க மறுத்த பேருந்தை இயக்க முற்பட்டவரிற்கு நேர்ந்த பரிதாபம்

இயங்க மறுத்த பேருந்தை இயக்க முற்பட்டவரிற்கு நேர்ந்த பரிதாபம்

தெஹியோவிட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெஹியோவிட்ட பழைய பஸ் தரிப்பு நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பஸ் வண்டி ஒன்று இன்று காலை 5.30 மணி அளவில் ஓட்டுனர் பஸ் ஐ செலுத்துவதற்கு முயற்சித்த போது பஸ் வண்டி இயங்கவில்லை.

இந்நிலையில் செயல்படாத பஸ் வண்டியின் சாரதி பஸ் வண்டியின் பிழையினை திருத்த முற்பட்டபோது பஸ்சுக்கு அடியில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் கலபிட்டமட இம்புள்கோட பிரதேசத்தை சேர்ந்த மெடிவில ஆசாரிகே சானக துலிப் விஜேவங்ச 25 வயது உடைய இளைஞன்.

மேலதிக விசாரணை தெஹியோவிட்ட பொலிசார் மேற்கொள்கின்றனர் இறந்தவரின் சடலம் மரண பரிசோதனைக்காக அவிசாவளை மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  அனுராதபுரம் சிறைச்சாலையின் சிசிடிவி காட்சிகளை அழிக்க பெரும் முயற்சி!
Previous articleயாழில் பதில் நீதவானின் காரினால் விபத்துக்குள்ளான ஓய்வுபெற்ற ஆசிரியர் உயிரிழப்பு
Next articleஇன்றைய ராசி பலன் – 05.01.2022