Home Ampara news பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு: நான்கு பொலிசார் உயிரிழப்பு

பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு: நான்கு பொலிசார் உயிரிழப்பு

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் சார்ஜன்ட் ஒருவரின் துப்பாக்கிச் சூட்டில் 4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளனர்.

நேற்று இரவு மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் சார்ஜென்ட் ஒருவரால் முதலில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் மற்றும் மேலும் இரு அதிகாரிகள் காயமடைந்து திருக்கோவில் மற்றும் அக்ரைப்பற்று மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் மற்றொரு சார்ஜன் இன்று அதிகாலை சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

திருக்கோவில் பொலிஸ் நிலையம் சிறப்பு அதிரடிப்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் இரண்டு ரி-56 ரக துப்பாக்கிகள் மற்றும் 19 தோட்டாக்களுடன் துப்பாக்கிச் சூடு நடத்திய சார்ஜன்ட் அத்திமலை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று சரண்டைந்துள்ளார்.

இதேவேளை குறித்த காவல் நிலையத்தில் கடமையாற்றிவரும் சார்ஜன்ட் ஒருவர் வீடு செல்வதற்கு நிலைய பொறுப்பதிகாரியிடம் விடுமுறை கோரியுள்ளார்.

எனினும் அவருக்கு விடுமுறை வழங்கததால் கோபமடைந்த சார்ஜன்ட் சம்பவதினமான நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணியளவில் காவல்நிலைய பொறுப்பதிகாரி வாகனத்தில் ஏறி ரோந்து நடவடிக்கைக்கு செல்வதற்கு தயாராகி இருந்தபோது அவர் மீது ’ துப்பாகிபிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

இதனை சற்றும் எதிர்பாராத சக காவல்துறை அதிகாரிகள் அவரை தடுக்க முற்பட்ட போது அவர்கள் மீதும் துப்பாக்கி பிரயோகம் செய்ததையடுத்து சம்பவ இடத்தில் 4 காவல்துறை உத்தியோகத்தர்கள் உயிரிழந்தனர்.

முதலாம் இணைப்பு

அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது.

READ MORE >>>  ஒரு வருட காலமாக பிணவறையில் தேங்கிக் கிடக்கும் சிசுக்களின் சடலங்கள்!

இந்த சம்பவத்தினை தொடர்ந்து குறித்த பொலிஸ் நிலையம் விசேட அதிரடிப்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்ததுடன், துப்பாக்கிச்சூடு நடாத்திய பொலிஸ் உத்தியோகத்தரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில்,நள்ளிரவில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவரின் உயிரை பறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது.

அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் பொலிஸ் சாஜன் ஒருவர் வீடு செல்வதற்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் விடுமுறை கோரியுள்ளதுடன்,விடுமுறை வழங்காததால் ஆத்திரமடைந்த பொலிஸ் சாஜன் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வாகனத்தில் ஏறி ரோந்து நடவடிக்கைக்கு செல்வதற்கு தயாராகி இருந்தபோது அவர் மீது ’ துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும், அவரை தடுக்க முற்பட்ட பொலிஸார் மீதும் அவர் துப்பாக்கி பிரயோகம் செய்ததையடுத்து சம்பவ இடத்தில் 3 பொலிஸார் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச்சூட்டினை நடத்திவிட்டு சந்தேகநபர் ரி 56 ரக துப்பாக்கிகள் இரண்டு மற்றும் ரவைகளுடன் எத்திமலே பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தையடுத்து குறித்த பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதுடன், சம்பவ இடத்திற்கு பொலிஸ் அத்தியட்சகர் உட்பட பொலிஸ் உயர் அதிகாரிகள் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

ஏனைய தளங்களிற்கு செல்ல..

Previous articleநொதேர்ன் தனியார் வைத்தியசாலையின் பொறுப்பற்ற செயல்
Next articleயாழில் சிறுவனைக் கத்தியால் குத்தி தொலைபேசி பறிப்பு