Home Tamil News கௌதாரிமுனையில் இளைஞன் கொலை: படகில் சுற்றுலா வந்த சந்தேக நபர்கள் தப்பியோட்டம்

கௌதாரிமுனையில் இளைஞன் கொலை: படகில் சுற்றுலா வந்த சந்தேக நபர்கள் தப்பியோட்டம்

சுற்றுலா சென்றிருந்த இடத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் யாழ்.ஆனைக்கோட்டையை சேர்ந்த இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் கிளிநொச்சி – பூநகரி கௌதாரிமுனையில் நேற்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

ஆனைக்கோட்டையிலிருந்து 17 பேர் கொண்ட குழு பூநகரி கௌதாரிமுனைக்கு சுற்றுலா சென்றுள்ளது.

இதன்போது மற்றொரு குழு குருநகரில் இருந்து படகு மூலம் அங்கு சுற்றுலா வந்திருந்தது. இந்நிலையில் இரு குழுக்களுக்கிடையிலும் உருவான வாய்த் தர்க்கம் பின்னர் மோதலாக மாறியுள்ளது.

குறித்த மோதலில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் அம்புலன்ஸ் வண்டி மூலம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோதும் உயிரிழந்துள்ளார்.

இம்மோதல் சம்பவத்தில் ஆனைக்கோட்டை சோமசுந்தரம் வீதியை சேர்ந்த ரஞ்சன் நிரோசன் (வயது22) என்ற இளைஞரே படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து குருநகாிலிருந்து படகு மூலம் அங்கு வந்திருந்த குழு தப்பி சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்ட கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் எஸ்.சிவபால சுப்பிரமணியம் வைத்தியசாலைக்கு சென்று சடலத்தையும் பார்வையிட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  மட்டக்களப்பு பறங்கியாமடு பிரதேச மக்களினால் கவனயீர்ப்பு போராட்டம்
Previous articleயாழில் சிறுவனைக் கத்தியால் குத்தி தொலைபேசி பறிப்பு
Next articleவிருந்துக்கு சென்ற இளைஞன் சடலமாக மீட்பு! இளவாலை பொலிஸார் தீவிர விசாரணை