Home Accident News கூலிக்கு மரம் வெட்ட சென்ற குடும்பஸ்த்தர் மீது மரம் விழுந்து பரிதாபகரமாக மரணம்

கூலிக்கு மரம் வெட்ட சென்ற குடும்பஸ்த்தர் மீது மரம் விழுந்து பரிதாபகரமாக மரணம்

மரம் வெட்டிக் கொண்டிருந்த குடும்பஸ்த்தர் மீது மரம் விழுந்ததில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்துச் சம்பவம் யாழ்.தெல்லிப்பழை – சூளாம்பதி கிராமத்தில் நடைபெற்றுள்ளது.

இவ்விபத்துச் சம்பவத்தில் தெல்லிப்பழை, சூளாம்பதியைச் சேர்ந்த 41 வயதுடைய எட்வேட் மதிவண்ணன் என்ற குடும்பஸ்தரே உயிழந்துள்ளார்.

மரம் வெட்டும் கூலித்தொழிலாளரான இவர் நேற்று முன்தினம் அளவெட்டி, மாசியப்பிட்டி பகுதியில் மரம் வெட்டச் சென்றுள்ளார்.

இதன் போது, வெட்டிய மரத்தை இழுத்து வீழ்த்த முற்பட்ட போது மரத்தினுள் வீழ்ந்து சிக்கிக் கொண்டார்.

இவ்விபத்தில் பலத்த காயமடைந்த நிலையில், நேற்றுமுன்தினம் மாலை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு சிகிச்சை பயனின்றி அன்று இரவு உயிரிழந்துள்ளார். நேற்று யாழ்.போதனா வைத்தியசாலை மரண விசாரணைகளின் பின் உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  4,200 ஒக்ஸி மீட்டர்கள் சிக்கின!
Previous articleயாழ்.ஆனைக்கோட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட 4 நபர்கள், பெண் ஒருவரும் கைது
Next articleயாழிலிருந்து கடத்தப்பட்ட விக்கிரகங்கள் மீள கொண்டுவரப்பட்டது