Home CRIME NEWS யாழ்.ஆனைக்கோட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட 4 நபர்கள், பெண் ஒருவரும் கைது

யாழ்.ஆனைக்கோட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட 4 நபர்கள், பெண் ஒருவரும் கைது

யாழிலிருந்து சுற்றுலா சென்றிருந்த இளைஞனின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய கூறப்படும் பிரதான சந்தேகநபர் மற்றும் பெண் ஒருவர் உட்பட 4 பேர் நேற்று மாலை கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

யாழ்.ஆனைக்கோட்டையிலிருந்து பூநகரி – கௌதாரிமுனைக்கு சுற்றுலா சென்றிருந்த இரு குழுக்களுக்கிடையில் கடந்த 26ம் திகதி ஏற்பட்ட முறுகலில் மேதலாகி, 22 வயதான இளைஞன் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்படும் அளவிற்குச் சென்றிருந்தது.

குறித்த சம்பவத்தையடுத்து தாக்குதல் நடத்திய தரப்பு கடல்வழியாக படகு மூலம் தப்பிச் சென்றதாக கூறப்பட்டது,

இந்நிலையில் நேற்றய தினம் பூநகரி பொலிஸ் நிலைய விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்று கிடைத்திருந்தது.

அத் தகவலின் அடிப்படையில் பொறுப்பதிகாரி சதுரங்க தலைமையிலான குழுவினர், பிரதான சந்தேகநபர் மற்றும் ஒரு பெண் உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்ததேக நபர்கள் பூநகரி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு விசாரிக்கப்பட்டதன் பின்னர், நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  குறிஞ்சாங்கேணியில் இலங்கை கடற்படை ஆரம்பித்துள்ள படகு சேவை!
Previous articleகிளிநொச்சியில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி; லண்டனில் இருந்து வந்த பெண் உரப்பையில் சடலமாக மீட்பு
Next articleகூலிக்கு மரம் வெட்ட சென்ற குடும்பஸ்த்தர் மீது மரம் விழுந்து பரிதாபகரமாக மரணம்