Home CRIME NEWS யாழில் தொடர் திருட்டில் ஈடுப்பட்டு வந்த நபரை மடக்கி பிடித்த பொலிஸார்

யாழில் தொடர் திருட்டில் ஈடுப்பட்டு வந்த நபரை மடக்கி பிடித்த பொலிஸார்

யாழ்.பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர் ஒருவரை கோப்பாய் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இக்கைது சம்பவம் யாழ்.கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்றுமுன்தினம் (29-12-2021) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

யாழ்.கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் தையல் இயந்திரம் என்பன தொடர்ச்சியாகக் களவாடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர், கடை ஒன்றில் தையல் இயந்திரத்தை களவாடிச் சென்றபோது அப்பகுதியில் இருந்த சி.சி.ரி.வி கமராவில் சந்தேக நபரின் நடமாட்டம் காணொளியாக பதிவாகியது.

இந்நிலையில் களவாடப்பட்ட தொலைபேசிகளை விற்பனை செய்வதற்காக நகரப் பகுதிக்கு குறித்த நபர் சென்றிருந்தார். இந்நிலையில் இவர் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு கோப்பாய் பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெத்து வருகின்றனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  அகில இலங்கை ரீதியில் முதலிடம்: சாவகச்சேரி இந்து மாணவன் சாதனை!
Previous articleலண்டனிலிருந்து திரும்பிய பெண் கொலைச் சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!
Next articleநீர் வீழ்ச்சியில் காணாமல்போன மூவரில் 16 வயது சிறுமி சடலமாக மீட்பு!