Home Tamil News கலாச்சார விழுமியங்களை பாதுகாத்தல்: நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் புதிய நடைமுறை

கலாச்சார விழுமியங்களை பாதுகாத்தல்: நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் புதிய நடைமுறை

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று தொடக்கம் புதிய நடைமுறை அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

கலாச்சார விழுமியங்களை பாதுகாக்கும் வகையில் அரைக் காற்சட்டை அணிந்து வரும் ஆண்கள் மற்றும் முழங்கால் தெரியும் வகையில் ஆடை அணிந்து வரும் பெண்களுக்கும் ஆலய முகப்பில் சால்வை வழங்கப்படும் நடைமுறையே இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆலயத்துக்கு சால்வையை அணிந்து சென்று வழிபாடுகள் நிறைவடைந்த பின்னர் அதனை பை ஒன்றிலிட்டு வழங்கப்பட்ட இடத்திலுள்ள பெட்டியில் மீள வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது.

ஆலயத்தில் இந்துமத பாரம்பரியங்களை பாதுகாக்கும் வகையில் இந்த நடைமுறை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  தாயின் இறப்பை தாங்கிக் கொள்ளாத மகன் தற்கொலை; வெள்ளவத்தையில் சம்பவம்.
Previous articleயாழிலிருந்து கொழும்பு சென்ற ரயில் மோதி கோர விபத்து! ஒருவர் பலி
Next articleஇலங்கையில் 41 புதிய ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம்