Home Accident News முல்லைத்தீவில் கோர விபத்து: இருவர் பலி; ஒருவர் படுகாயம்

முல்லைத்தீவில் கோர விபத்து: இருவர் பலி; ஒருவர் படுகாயம்

முல்லைத்தீவு – கேப்பாபுலவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

கனரக வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதிலேயே நேற்று (01)மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்று இளைஞர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தின்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த 48 அகவையுடைய பிலக்குடியிருப்பு கேப்பாபிலவினை சேர்ந்த கிருஸ்ணசாமி மாரிமுத்து, அதே இடத்தினை சேர்ந்த 17 அகவையுடைய சூரியகுமார் கரிதாஸ் என்பவர்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் ஆனந்தபுரம் புதுக்குடியிருப்பினை சேர்ந்த 22 அகவையுடைய சண்முகம் நிறோஜன் என்ற இளைஞன் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்து சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் குழப்ப நிலை தோன்றியுள்ளது. கிராம மக்கள் விபத்து இடம்பெற்ற வீதியில் ஒன்றுகூடி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  தரகரின் குடும்பத்தினர், ரிஷாத் வீட்டில் பணியாற்றிய மேலும் சில பெண்களிடம் விசாரணை
Previous articleகசூரினா கடலில் அலையில் அடித்துச் செல்லப்பட்ட மாணவன் சடலமாக மீட்பு
Next articleதாண்டிக்குளம் விபத்தில் இளைஞன் மரணம் – ஏ9 வீதியை மறித்து மக்கள் போராட்டம்