Home CRIME NEWS யாழில் கடை உடைத்துத் திருட்டு: வாழைச்சேனை சென்று கொள்ளையனை தூக்கி வந்த யாழ் பொலிசார்

யாழில் கடை உடைத்துத் திருட்டு: வாழைச்சேனை சென்று கொள்ளையனை தூக்கி வந்த யாழ் பொலிசார்

வாழைச்சேனையில் இருந்து யாழ்ப்பாணம் வந்து தொலைபேசி விற்பனை நிலையத்தை உடைத்து கொள்ளையடித்த நபரை வாழைச்சேனை சென்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் சந்தேகநபர் திருடிய தொலைபேசிகளை விற்பனைக்கு கொடுத்த மேலும் இருவரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். யாழ்.கே.கே.எஸ். வீதி – சத்திரச்சந்தியில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தில் கடந்த டிசம்பர் 22ம் திகதி இரவு திருட்டு இடம்பெற்றது.

அது தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. சம்பவம் தொடர்பில் சிசிரிவி பதிவுகளில் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

யாழ்.தலைமையக பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் றில்ரோக் தலைமையிலான குழுவினர் கடந்த வியாழக்கிழமை வாழைச்சேனை சென்று சந்தேக நபரைக் கைது செய்தனர்.

சந்தேக நபரிடமிருந்து திருடப்பட்ட அலைபேசிகளை விற்பனை செய்து கொடுத்த இருவர் கைது செய்யப்பட்டதுடன் 6 அலைபேசிகளும் கைப்பற்றப்பட்டன.சந்தேக நபர்கள் மூவரும் யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  வல்வெட்டித்துறையில் இன்று மேலும் 40 பேருக்கு கொரோனா
Previous articleகசூரினா கடலில் நீந்திய இளைஞர்களில் ஒருவர் உயிரிழப்பு, மற்றொருவர் கடற்படையினரால் மீட்பு
Next articleகசூரினா கடலில் அலையில் அடித்துச் செல்லப்பட்ட மாணவன் சடலமாக மீட்பு