Home Astology இன்றைய ராசி பலன் – 04.01.2022

இன்றைய ராசி பலன் – 04.01.2022

பிலவ வருடம் மார்கழி 20 ஆம் தேதி ஜனவரி 04, 2022 செவ்வாய்க்கிழமை. துவிதியை மாலை 05.19 மணிவரை அதன் பின் திருதியை, உத்திராடம் பகல் 10.56 மணி வரை அதன் பின் திருவோணம். சந்திரன் இன்று மகர ராசியில் பயணம் செய்கிறார். மிதுன சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

மேஷம்
சந்திரன் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் சனி பகவானுடன் பயணம் செய்கிறார். வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும் இருந்தாலும் விழிப்புணர்வு அவசியம். இன்று பிள்ளைகள் மூலம் குடும்பத்தில் அனுகூலம் கிட்டும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். கடின உழைப்பின் மூலம் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அடைவீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். சேமிப்பு உயரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும்.

ரிஷபம்
சந்திரன் இன்றைய தினம் பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். கடந்த சில நாட்களாக இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும் வண்டி, வாகனங்கள் மூலம் பராமரிப்பு செலவுகள் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. வெளியில் இருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும். பண வரவு அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

மிதுனம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எட்டாவது வீட்டில் பயணம் செய்கிறார். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. மற்றவர் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது உத்தமம். வெளியிடங்களில் பேசும் போது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். இன்று உங்களின் உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும்.

READ MORE >>>  இன்றைய நாள் உங்களிற்கு எப்படி

கடகம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஏழாவது வீட்டில் பயணம் செய்கிறார். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் தனவரவு உண்டாகும். புதிய பொருட் சேர்க்கை ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். உத்தியோகத்தில் கடினமான வேலைகளை கூட சக ஊழியர்களின் உதவியோடு செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

சிம்மம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஆறாவது வீட்டில் பயணம் செய்கிறார். நோய்கள் வெளிப்பட்டாலும் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் இதுவரை இருந்த பிரச்சினைகள் குறையும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தெளிவான மனநிலையில் முக்கிய முடிவு எடுப்பீர்கள்.

கன்னி
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஐந்தாவது வீட்டில் பயணம் செய்கிறார். பங்குச்சந்தை முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும். இன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி கூடும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் இன்றைய தினம் புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். உத்தியோகத்தில் புதிய நட்பு உண்டாகும். எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்கும்.

துலாம்
சந்திரன் இன்றைய தினம் ராசிக்கு நான்காவது வீட்டில் பயணம் செய்கிறார். சுக ஸ்தானத்தில் பயணம் செய்யும் சனியோடு பயணம் செய்யும் சந்திரனால் இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகள் மூலம் வீண் பிரச்சினைகள் தோன்றும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களில் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப் பலன்களும் உண்டாகும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

READ MORE >>>  இன்றைய ராசி பலன் - 27.11.2021

விருச்சிகம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டில் பயணம் செய்கிறார். உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிட்டும். வேலையில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். இன்று நீங்கள் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

தனுசு
சந்திரன் இன்று இரண்டாவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பண விசயத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் ஏற்படும். உற்றார் உறவினர்கள் மூலம் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். தம்பதியர் இடையே ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள்.

மகரம்
சந்திரன் உங்கள் ராசியில் பயணம் செய்கிறார். சனிபகவானுடன் இணைந்துள்ள சந்திரனால் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். திடீர் பண வரவு வந்து திக்கு முக்காட வைக்கும்.

கும்பம்
சந்திரன் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று ஆரோக்கிய ரீதியாக சிறு பாதிப்பு உண்டாகும். பண பற்றாக்குறையினால் குடும்பத்தில் நெருக்கடிகள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்கள் மூலம் உதவிகள் தேடி வரும். செய்யும் தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. ஆலய வழிபாடு மன நிம்மதியை அதிகரிக்கும்.

READ MORE >>>  இன்றை தினம் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் அதிகரிக்கும்

மீனம்
சந்திரன் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். உடல் ஆரோக்கியம் சீராகும். இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்ய நேரிடும். உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும், வியாபாரத்தில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

Previous articleஇந்த நபரை உங்களுக்கு தெரியுமா?
Next articleஅரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!