Home ஈழம் வேடிக்கை பார்தீர்கள்

வேடிக்கை பார்தீர்கள்

முள்ளி வாய்க்காலில்
கஞ்சிக்காக கோப்பையுடன் நீண்ட வரிசையில் பிஞ்சுகளெல்லாம் நின்ற போது
நெஞ்சை நிமிர்த்தியே
வேடிக்கை பார்தீர்கள்

அக்கினியின் குஞ்சொன்று
விசுக்கோத்து சாப்பிட்டபின்
மார்துளைத்து செத்து கிடந்தபோதும்
வேடிக்கை தானே பார்த்தீர்கள்

பிடிபட்ட பெண்டிர்களை
நிர்மூலம் ஆக்கிவிட்டு சிரித்து நின்ற போதும்
வேடிக்கை தானே பார்த்தீர்கள்

சாலையோரம் போனவர்கள்
காணாமல் போனபோது
வேடிக்கை தானே பார்த்தீர்கள்

வைத்தியசாலைகள் மீது குண்டுகள்
பொழிந்த போது
வேடிக்கை தானே பார்த்தீர்கள்

பாதுகாக்கப்பட்ட பகுதிகளிலும்
கந்தக குண்டை வீசும் போது
வேடிக்கை தானே பார்த்தீர்கள்

கிழங்குக்காக வரிசையில் நின்றவர்களை
கிளஸ்ரர் குண்டு போட்டு அவிந்த போதும்
வேடிக்கை தானே பார்த்தீர்கள்

மருந்தும், மாத்திரையும்
உணவும் , உடுப்பும்
அங்கு அனுப்பாமல் விட்ட போதும்
வேடிக்கை தானே பார்த்தீர்கள்

குண்டடிபட்டு இறந்தவள் மார்பில்
குழந்தை முலை சூப்பியபோது
வேடிக்கை தானே பார்த்தீர்கள்

வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்தோர்
எங்கென்று கேட்டபோதும்
வேடிக்கை தானே பார்த்தீர்கள்

முட்கம்பி வேலிகளுக்குள்
முன்னூறாயிரம் பேர் அடக்கி வைக்கயிலும்
வேடிக்கை தானே பார்த்தீர்கள்

அத்தியாவசியம் அனைத்துக்குமாய்
இப்போது நீண்ட வரிசையில்
நீங்கள் நிற்கும் போது
எம்மால் உமைப்போல
வேடிக்கை பார்க்க முடியவில்லை
மனம் கொதிக்கிறோம்

வேடிக்கை என்னவென்றால்
மேல்சொன்ன எல்லாவற்றையும் எமக்கு தந்தவர்களால் தான்
உமக்கும் தரப்படுகிறது
காலம் எவ்வளவு விரைவாக காட்டும் என்பது
இதுதானா!

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  கிளிநொச்சி இளம்பெண் மரண மர்மம்: புதிய தகவல்கள்!
Previous articleகோர விபத்து – காதல் ஜோடி உயிரிழப்பு
Next articleகசூரினா கடலில் நீந்திய இளைஞர்களில் ஒருவர் உயிரிழப்பு, மற்றொருவர் கடற்படையினரால் மீட்பு