Home Local news தெஹிவளை கடற்கரையில் முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி , ஒருவர்உயிரிழப்பு

தெஹிவளை கடற்கரையில் முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி , ஒருவர்உயிரிழப்பு

தெஹிவளை கடற்கரையில் முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி சுழியோடி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மீன்பிடியில் ஈடுபட்டு வந்த சுழியோடி ஒருவரே இவ்வாறு முதலையின் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முதலையின் தாக்குதலில் படுகாயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் தற்போது களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் இரத்மலானை ரயில் நிலைய குடியிருப்பில் வசிக்கும் 58 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  தெஹிவளை மிருகக்காட்சிசாலை குரங்குகள் நான்கிற்கு கொரோனா
Previous articleகுடியிருப்புப் பகுதியில் மருத்துவக் கழிவுகள் எரிப்பு: நொதேர்ன் உரிமையாளரிடம் தண்டப்பணம்
Next articleடிக்டொக் வீடியோ தொடர்பாக ஏற்பட்ட தகராறு – கொழும்பில் 17 வயது சிறுவன் கொலை