Home Local news கைத்தொலைபேசியில் குறுந்தகவல்கள் மூலம் வந்த எமன்

கைத்தொலைபேசியில் குறுந்தகவல்கள் மூலம் வந்த எமன்

கைத்தொலைபேசியில் குறுந்தகவல்கள் பரிமாற்றிக் கொண்ட சிறுமி ஒருவர் ஏதோ ஒரு விடயம் தொடர்பில் மன ரீதியான பாதிப்புக்குள்ளான மையால் தனது வீட்டுக் கிணற்றில் குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித் துள்ளனர்.

கருவலகஸ்வெவ, சியம்பலேவ கிராமத்தில் 15 வயது டைய சிறுமியின் சடலம் அவரது வீட்டுக் கிணற்றி லிருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளதென கருவலகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.

கருவலகஸ்வெவ, டீ.எஸ்.சேனநாயக்க வித்தியால யத்தின் 10ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியின் தாய் கூலி வேலை செய்து சம்பாதித்த பணத்தில் சிறுமியின் கல்வி நடவடிக்காக கையடக்கத் தொலைபேசி ஒன்றை வாங்கிக் கொடுத் துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது வரை மேற்கொண்ட விசாரணையில் குறித்த சிறுமி கருவலகஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞனுடன் இரகசிய காதல் தொடர்பு வைத்துள்ளார் எனத் தெரிய வந்துள்ளது.

குறித்த இளைஞனுடன் குறித்த சிறுமி கடந்த 28ஆம் திகதி இரவும் 29 ஆம் திகதி காலையிலும் குறுந்தக வல்களைப் பரிமாறிக் கொண்டுள்ளார் என்றும் அதன் பின்னர் ஏதோ ஒரு விடயம் தொடர்பில் மன ரீதியான பாதிப்புக்குள்ளாகியிருந்ததாக பொலிஸ் விசாரணை களின் மூலம் உறுதியாகியுள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  திருமணம் குறித்து பேசிய நடிகை ஓவியா;
Previous articleநீர் வீழ்ச்சியில் காணாமல்போன மூவரில் 16 வயது சிறுமி சடலமாக மீட்பு!
Next articleயாழிலிருந்து கொழும்பு சென்ற ரயில் மோதி கோர விபத்து! ஒருவர் பலி