Home CRIME NEWS மட்டக்களப்பில் கொடூர கொலை!! வெளிவரும் திடுக்கிடும் பின்னணி

மட்டக்களப்பில் கொடூர கொலை!! வெளிவரும் திடுக்கிடும் பின்னணி

மட்டக்களப்பு அரசடி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வர்த்தகர் ஒருவரின் மனைவியை கொலைசெய்துவிட்டு அவரது நகைகளை கொள்ளையிட்டு சென்ற இருவரை பொதுமக்கள் மட்டக்கிப் பிடித்துள்ளனர்.

மட்டக்களப்பு தலைமையக காவல்துறை பிரிவுக்குட்பட்ட அரசடி பார்வீதியில் உள்ள வீட்டில் இந்தச் துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டுக்கு வழமையாக வருகைதந்து வேலைகள் செய்துவிட்டுச்செல்லும் தகப்பனும் மகளுமே இந்தச் சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

தகப்பனும் மகளும் தமக்கு உணவு தருமாறு கோரி குறித்த பெண்ணிடம் உணவுபெற்று உண்ட பின்னரே இந்தக் கொலையை செய்துள்ளனர்.

வீட்டின் உரிமையாளரான பெண்ணை கத்தியால் வெட்டி, தாலிக்கொடியை பறித்துள்ளதுடன், காதணிகளை கழட்டமுடியாத நிலையில் காதுகளையும் வெட்டி எடுத்துச்சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இருவரும் அங்கிருந்த தப்பிச் சென்றபோது வீதியில் நின்றவர்கள் அவர்களின் உடைகளில் இரத்தக்கறை உள்ளதை கண்டு சந்தேகம்கொண்டு துரத்திச்சென்ற அயலவர்கள் இருவரையும் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த சம்பவத்தின்போது 50வயதுடைய தயாவதி செல்வராஜா என்னும் பெண்ணே உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினர் மற்றும் புலனாய்வுத்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்ட தடவியல் பிரிவு காவல்துறையினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தையடுத்து குறித்த பகுதியில் பெருமளவு மக்கள் ஒன்றுகூடிய நிலையில், அப்பகுதியில் பதற்ற நிலைமையும் ஏற்பட்டிருந்தது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  பிரதேச சபை உறுப்பினர் பண்ணை வீட்டில் சடலமாக மீட்பு!
Previous articleகிளிநொச்சி இளம்பெண் மரண மர்மம்: புதிய தகவல்கள்!
Next articleபதுளையில் மேலதிக வகுப்புக்காக சென்ற 17 வயது மாணவி மாயம்!