Home Tamil News கிணற்றிலிருந்து 4 வயது சிறுமியின் சடலம் மீட்பு!

கிணற்றிலிருந்து 4 வயது சிறுமியின் சடலம் மீட்பு!

கிளிநொச்சி அம்பாள்நகர் பகுதியில் 4 வயது சிறுமி கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று (19) மாலை இந்த சம்பவம் நடந்தது.

விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமி காணாமல் போன நிலையில் தேடப்பட்டுள்ளார்.

சிறுமியை உறவினர்கள் மற்றும் அயலவரின் உதவியுடன் தேடி வந்த நிலையில், வீட்டு கிணற்றினை நீர் பம்பியில் மூலம் இறைத்துள்ளனர்.

இதன்போது சிறுமி கிணற்றிலிருந்து சடலமாக அடையாளம் காணப்பட்டு, பின்னர் மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியின் உடல் பிரேத பரீசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

டசிந்தன் சன்சிகா என்ற 04 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  யாழ்ப்பாணத்திற்கு சூட்சுமமாக கடத்தப்பட்ட முதிரை மரக்குற்றிகள் சிக்கின
Previous article2 மாத கர்ப்பம்… கருக்கலைப்பின் போதே விபரீதம்; முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி விவகாரத்தில் திடுக்கிடும் திருப்பம்!
Next articleமீன்பிடித்து விளையாடிய சிறுவன் கிணற்றில் வீழ்ந்து உயிரிழப்பு: வடமராட்சியில் சோகம்!