Home CRIME NEWS கிளிநொச்சியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இளம் பெண்: மரணத்தில் பலத்த சந்தேகம்!

கிளிநொச்சியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இளம் பெண்: மரணத்தில் பலத்த சந்தேகம்!

கிளிநொச்சியில் இளம் தாயொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது மரணத்தில் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.

நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜெயந்திநகரில் வாடகை வீட்டில் வசித்து வந்த இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தரான இவர் முன்பள்ளி ஆசிரியையாக சேவை புரிந்து வந்துள்ளார்.

கிளிநொச்சி விநாயகபுரம், இயக்கச்சி பகுதியை சேர்ந்த இவர் தொழிலின் நிமித்தம் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

நேற்று இரவும் வழமைபோல இரண்டு பிள்ளைகளும் சென்றுள்ளனர். அதே வேளை கடைசி பிள்ளை தாயாருடன் வழமைபோல நின்றுள்ளது.

இந்த நிலையில் ஆரம்பகட்ட விசாரணைகளில் பெண்ணின் மரணத்தில் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.

சடலத்தை நீதவான் பார்வையிட்டதன் பின்னர் பொலிசார் விரிவான விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  நொதேர்ன் தனியார் வைத்தியசாலையின் பொறுப்பற்ற செயல்
Previous articleமுல்லைத்தீவில் முன்னாள் போராளி அடித்துக் கொலை: மனைவி, கள்ளக்காதலனை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி!
Next articleதோட்டக்காணிக்குள் 8 வயது சிறுவன் சடலமாக மீட்பு! யாழிலும் தொடரும் துயரம்