Home CRIME NEWS யால வனத்திற்குள் 8 வருடமாக மறைந்திருந்து கொலைகளில் ஈடுபடுபவர் கைது!

யால வனத்திற்குள் 8 வருடமாக மறைந்திருந்து கொலைகளில் ஈடுபடுபவர் கைது!

கொலைக்குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ள ஒருவர், சுமார் 8 வருடங்களாக யால வனப்பகுதியில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

யால வனப்பகுதியில் தலைமறைவாக இருந்தபடி, பல கொலைகள் மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கதிர்காமம் பொலிஸாரால் பல நாட்களாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மைக்காலமாக கதிர்காமம் பிரதேசத்தில் இடம்பெற்ற பல கொலைச் சம்பவங்களின் பிரதான சந்தேகநபராக இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் யால வனத்தில் உள்ள வன விலங்குகளை வேட்டையாடி பாரியளவிலான இறைச்சி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

2011ஆம் ஆண்டு கதிர்காமம் 20 ஏக்கர் பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபருக்கு எதிராக ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஜுலை மாதம் கதிர்காமம் நாகஹா தெரு பகுதியில் இந்து மதகுரு ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபராக இந்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  மீண்டும் வெளிவரும் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள்
Previous articleதொட்டில் கயிற்றில் சிக்கி நான்கு வயது பெண் குழந்தை பலி!
Next articleமாங்குளத்தில் கணவனை கொடூரமாக கொன்ற பெண்