Home Local news தனது பிள்ளைகளை மரத்தில் கட்டி வைத்து மிளகாய்த்தூள் தூவி தண்டித்த தந்தை கைது!

தனது பிள்ளைகளை மரத்தில் கட்டி வைத்து மிளகாய்த்தூள் தூவி தண்டித்த தந்தை கைது!

தனது 6 வயது மகனையும் 7 வயது மகளையும் மரத்தில் கட்டி வைத்து மிளகாய்த்தூள் தூவி சித்ரவதை செய்த தந்தையை சந்தேகத்தின் பேரில் ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இரண்டு குழந்தைகளும் மருத்துவ பரிசோதனைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன், குடாகம பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர், ஹட்டன் டிக்கோயா நகரசபையில் சுகாதார தொழிலாளியாக சேவையாற்றி வருகிறார்.

சந்தேகநபர் மதுவுக்கு அடிமையானவர் எனவும், குடித்துவிட்டு வீட்டுக்குச் சென்று மனைவியைத் தாக்கிவிட்டு நான்கு பிள்ளைகளையும் இவ்வாறு சித்திரவதை செய்துள்ளதாகவும்

மிளகாய்த்தூள்

ஹட்டன் குடாகம பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு பிள்ளைகளையுமட நேற்று (02) கடைக்கு அனுப்பியதுடன், விறகு எடுக்கவும் பணித்ததாகவும், பிள்ளைகள் அதை செய்யவில்லையென்பதற்காக மிளகாய்த்தூள் தூவி கொடூர சித்திரவதையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இரண்டு பிள்ளைகளும் பிரதேசவாசிகளால் விடுவிக்கப்பட்டு, அட்டன் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து சந்தேக நபரான தந்தை நேற்று (02) இரவு ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (03) ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  மலையகத்தில் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்து செல்லப்பட்டபின்னர் அரங்கேறும் கூத்துக்கள்!
Previous articleயாழில் டிப்பர்- மோட்டார் சைக்கிள் விபத்து
Next articleஅவுஸ்திரேலியாவில் யாழ் இளைஞருக்கு நேர்ந்த பெரும் சோகம்