Home Local news பூனைகளுடன் சமையலில் ஈடுபட்ட மட்டக்களப்பு உணவகம் முற்றுகை!

பூனைகளுடன் சமையலில் ஈடுபட்ட மட்டக்களப்பு உணவகம் முற்றுகை!

மட்டக்களப்பு நகரில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது சமைக்கும் பகுதியில் விலங்குகளுடனும், சுகாதாரத்திற்கு தீங்கை விழைவிக்கும் கழிவு நீரினை திறந்த வெளியினுள் வெளியேற்றிய உணவகம் இன்று பொதுச்சுகாதார பரிசோதகரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையின் போது உரிமையாளரிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், 30,000 ரூபாய் தண்டப்பணம் வழங்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி ரிஸ்வான் (A.C.Riswan) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுச்சுகாதார பரிசோதகர்களின் அதிரடி நடவடிக்கை காரணமாக பல இடங்கள் முற்றுகையிடப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Gallery Gallery Gallery Gallery Gallery Gallery

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  கொழும்பு மருத்துவமனை கைக் குண்டு விவகாரம்; திருகோணமலையில் மேலுமொரு இளைஞன் கைது
Previous article‘பேய காணோம்’ படப்பிடிப்பிலிருந்து மாயமான மீரா மிதுன்!
Next articleபுலிகளை மீளுருவாக்க முயன்றார்களாம்: 15 இலங்கையர்கள் மீது இந்தியாவில் குற்றப்பத்திரம் தாக்கல்!