Home Astology இன்றைய ராசி பலன் – 17.12.2021

இன்றைய ராசி பலன் – 17.12.2021

பிலவ வருடம் மார்கழி 2 ஆம் தேதி டிசம்பர் 17,2021 வெள்ளிக்கிழமை. சதுர்த்தசி திதி முழுநாள்
கிருத்திகை நட்சத்திரம் பகல் 10.40 மணி வரை அதன் பின் ரோகிணி நட்சத்திரம். சந்திரன் இன்றைய தினம் ரிஷப ராசியில் பயணம் செய்கிறார். துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

சந்திரன் இன்று இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று வீடு தேடி நல்ல செய்தி தேடி வரும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். செய்யும் முதலீடுகள் இரட்டிப்பாகும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுக படுத்தி லாபம் பெறுவீர்கள். புதிய பொருள் வீடு வந்து சேரும். திருமண பேச்சுவார்த்தைகள் தொடங்க அனுகூலமான நாளாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

ரிஷபம்

ரிஷபம்

சந்திரன் உங்கள் ராசியில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் அனுகூலமான பலனை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளுக்கு இடையே ஒற்றுமை பலப்படும். திடீர் தன வரவு உண்டாகும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

மிதுனம்

மிதுனம்

சந்திரன் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். வீட்டில் கருத்து வேறுபாடு உண்டாகும். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.

கடகம்

கடகம்

சந்திரன் லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எந்த செயலிலும் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்திருந்த உதவிகள் எளிதில் கிடைக்கும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கடன் பிரச்சினைகள் தீரும். மன மகிழச்சி ஏற்படும்.

READ MORE >>>  இன்றைய ராசிபலன்- 11/07/2021
சிம்மம்

சிம்மம்

சந்திரன் உங்கள் ராசிகு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். லாபம் இரட்டிப்பாகும். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பிள்ளைகளுடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். குடும்பத்தில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும்.

கன்னி

கன்னி

சந்திரன் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். பாக்யங்கள் நிறைந்த நாளாகும். இன்று உறவினர்களால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். கடந்த 2 நாட்களாக இருந்த பிரச்சினைகள் நீங்கும். செலவுகளை குறைப்பதன் மூலம் பணப் பிரச்சினையை தவிர்க்கலாம். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

துலாம்

துலாம்

சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். பேச்சில் கவனம் தேவை. செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பயணங்களில் கவனம் தேவை. உணவுகளில் கவனம் தேவை. காரமான உணவுகளைத் தவிர்க்கவும்.

விருச்சிகம்

விருச்சிகம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். கணவன் மனைவி இடையே நெருக்கம் ஏற்படும். இன்று உறவினர்கள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று பணப்பிரச்சினைகள் குறையும். வீட்டுத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் எதிர்ப்புகள் குறைந்து வருமானம் அதிகரிக்கும்.

READ MORE >>>  இன்றைய ராசிபலன்கள் - 15/10/2021, கடக ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள்
தனுசு

தனுசு

சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று பணவரவு அமோகமாக இருக்கும். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். கடன் பிரச்சினைகள் நீங்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும். வியாபாரத்தில் கூட்டளிகளின் ஒத்துழைப்பால் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். நினைத்தது நிறைவேறும்.

மகரம்

மகரம்

சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

கும்பம்

கும்பம்

சந்திரன் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்களின் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் கூடும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். நண்பர்களின் உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும்.

மீனம்

மீனம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். திருமண சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளால் அனுகூலங்கள் உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் கிட்டும்.

READ MORE >>>  சிம்ம ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்று

ஏனைய தளங்களிற்கு செல்ல..

Previous articleஹொலிவூட் படங்களிலும் நடிக்க விரும்புகிறேன்: புதிய பிரபஞ்ச அழகி ஹர்னாஸ் சாந்து!
Next articleஇலங்கையில் நுழைந்த ஒமிக்ரான்! நால்வர் அடையாளம்