Home Tamil News 13 வயது சிறுமிகளை இலக்கு வைத்து கடத்தும் நபரால் பதட்டம்!

13 வயது சிறுமிகளை இலக்கு வைத்து கடத்தும் நபரால் பதட்டம்!

மூதூர் பொலிஸ் நிலையத்தில் புளியடிச்சோலை கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது;

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியடிச்சோலை கிராமத்தைச் சேர்ந்த 13 வயதான பாடசாலை மாணவி ஒருவர் 07.12.2021 அன்று இரவு அக்கிராமத்தைச் சேர்ந்த செல்வநாயகம் உதயன் (வயது 24) என்பவரினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸ் நிலையத்தில் 08.12.2021 அன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் கடத்தப்பட்ட சிறுமி கங்குவேலி அகத்தியர் வித்தியாலயத்தில் தரம் 8ல் கல்வி கற்றுவரும் மாணவி எனவும் தெரிய வருகின்றது. இச்சிறுமியை கடத்தியதாக கூறப்படும் செல்வநாயகம் உதயன் என்பவர் கடந்த வருடம் 13 வயதான இன்னுமொரு சிறுமியை கடத்திச் சென்று துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டு இவ்வருடம் பெப்ரவரி மாதம் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். இவ்வாறான நிலையில் இன்னுமொரு சிறுமியை கடத்திச் சென்றிருப்பது கிராம மக்களிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இச்சிறுமி கடத்தப்பட்டு 10நாட்களுக்கு மேலாகியும் மூதூர் பொலிசாரினால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அக்கிராம மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  திருமலையில் விடுதலை புலிகளின் ஆயுதங்களை தேடி பொலிஸார் அகழ்வுப்பணியில்
Previous articleபடு மோசமான பிகினி உடையில் கும்மாளம் போட்ட சமீரா ரெட்டி
Next articleஹொலிவூட் படங்களிலும் நடிக்க விரும்புகிறேன்: புதிய பிரபஞ்ச அழகி ஹர்னாஸ் சாந்து!