Home CRIME NEWS கட்டாய உடலுறவுக்கு முயன்ற கணவனின் ஆணுறுப்பை துண்டித்த மனைவி:

கட்டாய உடலுறவுக்கு முயன்ற கணவனின் ஆணுறுப்பை துண்டித்த மனைவி:

இந்திய மத்தியபிரதேச மாநிலத்தில் தன்னை கட்டாயப்படுத்தி உடலுறவுக்கு முயன்ற கணவனின் ஆணுறுப்பை மனைவியே துண்டித்த சம்பவம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மத்திய பிரதேச மாநிலம் ஜாட்டாரா பொலிஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒருவர், அண்மையில் பொலிஸில் தனது மனைவி ஆத்திரத்தில் எனது ஆணுறுப்பை வெட்டி விட்டதாக புகார் அளித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து பொலிஸார் விசாரித்த போது, இவரும் இவரது மனைவியும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளனர்.பின்னர் மனஸ்தாபம் காரணமாக பிரிந்து வாழ்ந்துள்ளனர்.

Brazilian Wife Cuts Her Husband Penis And Cooks In A Frying Pan: महिला ने पति की चाकू मारकर की हत्या, फिर प्राइवेट पार्ट काटकर पैन में पकाया - Navbharat Times

இந்நிலையில் இருவரையும் நீதிமன்றம் சில காலம் சேர்ந்து வாழ்ந்து பார்க்க கூறி கேட்டுள்ளது. அதன் படி இருவரும் சேர்ந்திருக்கும் போது கணவன் தன் மனைவியை கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்ள முயற்சி செய்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மனைவி கத்தியை எடுத்து கணவனின் ஆணுறுப்பை வெட்டியுள்ளார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்த நிலையில், அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு ஆணுறுப்பு ஒட்டவைக்கப்பட்டது.

மேலும் இது குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  2 மாத கர்ப்பம்… கருக்கலைப்பின் போதே விபரீதம்; முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி விவகாரத்தில் திடுக்கிடும் திருப்பம்!
Previous articleவவுனியாவில் துப்பாக்கிச் சூடு! பெண் ஒருவர் பலி
Next articleதிருடிய நகைகளை திருப்பி கொடுத்த திருடன்;