Home Astology இன்றைய ராசி பலன் – 15.12.2021

இன்றைய ராசி பலன் – 15.12.2021

பிலவ வருடம் கார்த்திகை 29ஆம் தேதி டிசம்பர் 15,2021 புதன்கிழமை. துவாதசி திதி இரவு 02.02 மணி வரை அதன் பின் திரயோதசி திதி. பரணி நட்சத்திரம் முழுநாள். சந்திரன் இன்று மேஷ ராசியில் பயணம் செய்கிறார். கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

சந்திரன் உங்கள் ராசியில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

ரிஷபம்

ரிஷபம்

சந்திரன் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். வேலை விஷயமாக வீண் அலைச்சல்கள் உண்டாகும். பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் அதிகமாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.

மிதுனம்

மிதுனம்

சந்திரன் லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வேலை சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சினை தீரும்.

கடகம்

கடகம்

சந்திரன் பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். உறவினர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி நிறைவேறும். உடல் ஆரோக்கியம் சீராகும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.

READ MORE >>>  குருப்பெயர்ச்சி பலன்கள்- மகர ராசி
சிம்மம்

சிம்மம்

சந்திரன் ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். கடந்த 2 நாட்களாக இருந்த பிரச்சினைகள் நீங்கும். இன்று குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் பண வருமானம் பெருகும்.

கன்னி

கன்னி

சந்திரன் இன்று எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் சோர்வுடனும் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் தடை தாமதம் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது உத்தமம். தொழில் ரீதியான புதிய முயற்சிகளில் கவனம் தேவை.

துலாம்

துலாம்

சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எந்த காரியத்தையும் சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். நண்பர்கள் வழியாக எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும். உத்தியோகத்தில் புதிய நபரின் அறிமுகம் ஏற்படும்.

விருச்சிகம்

விருச்சிகம்

சந்திரன் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் நீங்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும்.

READ MORE >>>  இன்றைய ராசி பலன் - 04.01.2022
தனுசு

தனுசு

சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு திடீர் செலவுகள் வரும். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். உடன்பிறப்புக்கள் வழியில் மனநிம்மதி உண்டாகும். ஆடம்பர பொருள் வாங்குவதில் கவனம் தேவை. பிள்ளைகளால் பெருமை சேரும். உத்தியோகத்தில் சிலருக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் பெருகும்.

மகரம்

மகரம்

சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அலைச்சல் உண்டாகும். திருமண சுப முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளால் கடன் வாங்க நேரிடும். வேலை செய்யும் இடத்தில் பணிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

கும்பம்

கும்பம்

சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். பொருளாதார தேவைகள் பூர்த்தியாகும்.

மீனம்

மீனம்

சந்திரன் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

READ MORE >>>  குருப்பெயர்ச்சி பலன்கள்- மிதுன ராசி

ஏனைய தளங்களிற்கு செல்ல..

Previous articlePTAன் கீழ் கைது செய்யப்பட்ட சம்பூர் இளைஞனுக்கு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியது;
Next articleஉயரத்தில் இருந்து கீழே விழுந்த தம்பதிகள்