Home Local news காணாமல் போன சிறுவர்களை கண்டுபிடிக்க பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸ்

காணாமல் போன சிறுவர்களை கண்டுபிடிக்க பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸ்

கம்பஹா கொட்டதெனியாவ  பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  வத்தேமுல்ல, பாந்துராகொட பகுதியைச் சேர்ந்த  உறவினர்களான இரு சிறுவர்கள்  காணாமல் போயுள்ளனர்.

கடந்த நவம்பர் 23 ஆம் திகதி முதல் அவர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ள நிலையில், ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளுக்கு அமைய அச்சிறுவர்கள் தொடர்பில் எந்த தகவல்களும் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை என பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

இவ்வாறான பின்னணியில் அந்த இரு சிறுவர்களையும்  கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் ஒத்துழைப்பை  எதிர்ப்பர்ப்பதாக பொலிஸ் தலைமையகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு அறிவித்துள்ளது.

காணாமல் போயுள்ளவர்களில் ஒருவரான 10 வயதான திசாநாயக்க முதியன்சேலாகே சந்தகெலும் எனும் சிறுவன் , 4 அடி உயரமானவர் எனவும்  சற்று பருமனான உடற் தோற்றத்தை கொண்டவர் எனவும், தலைமுடியை கட்டையாக வெட்டியிருந்ததாகவும்,  இறுதியாக நீல நிற ரீ சேர்ட் ஒன்றினையும் , கறுப்பு சிற சதுரங்களிக் கொண்ட அரைக் காற் சட்டை ஒன்றினையும் அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மற்றைய சிறுவன் ஜயசேகர முதலிகே அகில தேதுணு எனும் 12 வயதானவர். 4 அடி 10 அங்குலம் உயரமானவர் , அவர் இறுதியாக நீல சிற காலர் உடன் கூடிய ரீ சேட்டினையும்,  சிவப்பு நிற அரைக் காட்சட்டையையும் அணிந்திருந்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.

குறித்த சிறுவர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால் கொட்டதெனியாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின்  071 8591634, எனும் இலக்கத்துக்கோ கொட்டதெனியாவ பொலிஸ் நிலையத்தின்  033- 2240050, 033-2272222 எனும் இலக்கங்களுக்கோ அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  நுரைச்சோலையில் பணியாற்றிய பொலிஸ் அதிகாரி மரணம்!
Previous articleஇந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு
Next articleஜனாதிபதி கோட்டாபய சிங்கப்பூருக்கு பயணமானார்