Home Accident News ரயிலுடன் ஆட்டோ மோதி விபத்து; வவுனியாவில் சம்பவம்.

ரயிலுடன் ஆட்டோ மோதி விபத்து; வவுனியாவில் சம்பவம்.

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் ரயிலுடன் ஓட்டோ விபத்துக்கு உள்ளானதில், ஓட்டோ ​சேதமடைந்தது. ஓட்டோவின் சாரதி அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார்.

இவ்விபத்து, இன்றுக் காலை 10 மணியளவில் வவுனியா  தாண்டிக்குளம் ரயிவே கடவையில், இடம்பெற்றுள்ளது.

ஓமந்தை பகுதியில் இருந்து தாண்டிக்குளம் புகையிரதக்கடவையால் கடக்க முற்பட்ட ஓட்டோ, தண்டவாளப்பகுதியில் சென்றபோது இயந்திரக்கோளாற்றினால் நின்றுள்ளது.

இதன்போது  கொழும்பில் இருந்து யாழ்நோக்கி பயணித்த யாழ்.தேவி, குறித்த ஓட்டோவை மோதித்தள்ளியது. ஓட்டோவிலிருந்து சாரதி, கீழே பாய்ந்து தப்பியோடியமையால், உயிர்த்தப்பினார்.

இந்த சம்பவம் தொடர்பில் ​பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  மட்டக்களப்பில் கார் - மோட்டார் சைக்கிள் விபத்து பாடசாலை மாணவன் காயம்.
Previous articleஓய்வூதிய வயதை 65ஆக உயர்த்த எதிர்ப்பு
Next article17 வயதான மாணவனை கடத்தி நிர்வாணமாக்கி தாக்குதல்