Home world news 12ஆவது திருமணத்திற்கு மணமகன் தேடும் 52 வயது அமெரிக்க பெண்!

12ஆவது திருமணத்திற்கு மணமகன் தேடும் 52 வயது அமெரிக்க பெண்!

அமெரிக்காவைச் சேர்ந்த 52 வயது பெண் ஒருவர் ஏற்கனவே 11 முறை திருமணம் செய்துவிட்டு தற்போது 12ஆவது முறை திருமணம் செய்வதற்காக மாப்பிள்ளையை தேடி வருகிறார்.

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் மோனா, இவருக்கு சிறு வயது முதலே திருமணம் மீது ஒரு ஈர்ப்பு இருந்துள்ளது.

சிறு வயதில் அவருக்கு தனது சகோதரர்களின் நண்பர்களை பார்க்கும் போது அவர்களை திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்குமாம். மேலும், அவர் தனது பாடசாலை படிப்பை முடித்ததும் முதல் திருமணத்தை செய்து கொண்டா். இதுவரை அவர் 11 பேரை திருமணம் செய்துவிட்டார். தற்போது 12ஆவதாக திருமணம் செய்ய மணமகனை தேடி வருகிறார்.

New York to become 6th state to ban child marriage in the United States

தற்போது 52 வயதாகும் இவருக்கு இதுவரை 28 திருமண புரோபோசல் வந்துள்ளதாகவும், தற்போது 57 வயதான ஜோன் என்பவருடன் டேட்டிங்கில் இருப்பதாகவும், 2 ஆண்டுகளாக அவருடன் உறவில் இருப்பதாகவும் கூறுகிறார்.

ஜோன் யார் என்றால் ஏற்கனவே இவரை 2 முறை திருமணம் செய்து விவகாரத்து செய்தவர். தற்போது அவருக்கு மீண்டும் மோனாவை திருமணம் செய்ய விருப்பம் இருக்கிறதாம். தற்போது 12 முறையாக மீண்டும் ஜோனை திருமணம் செய்ய போகிறாராம்.

மோனாவில் வாழ்வில் அவரது 5ஆவது கணவர் தான் சிறந்த கணவராம், 6ஆவது கணவர் நல்ல குணம் உள்ள கணவராம், அதனாலேயே தனது 6ஆவது கணவரை இரு முறை திருமணம் செய்து கொண்டாராம்.

தனது 8ஆவது கணவரை ஒன்லைனில் பேசி பழகி திருமணம் செய்து கொண்டாராம். தனது 10 கணவர் அவரது பாடசாலை கால நண்பராம். இந்த செய்தி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

READ MORE >>>  "அமெரிக்க டொலரின் மதிப்பு 300 ரூபாவாக உயரக்கூடும் ஆபத்து"

ஏனைய தளங்களிற்கு செல்ல..

Previous article310 கிலோ எடைகொண்ட நீலமாணிக்கத்துக்கு ஆசியாவின் ராணி என பெயரிடப்பட்டது!
Next articleஓய்வூதிய வயதை 65ஆக உயர்த்த எதிர்ப்பு