Home Local news அம்பாறை சங்கமன்கண்டியில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டது!

அம்பாறை சங்கமன்கண்டியில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டது!

அம்பாறை பொத்துவில் பிரதேச செயலாளர் நிருவாக எல்லைக்கு உட்பட்ட சங்கமன்கண்டி படிமலை அடிவாரத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை நேற்று (11) இரவு அகற்றப்பட்டுள்ளது.

இந்த புத்தர் சிலையானது நேற்று சனிக்கிழமை அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியில் சங்கமன்கண்டியில் இரவோடு இரவாக வைக்கப்பட்டிருந்ததுடன் அதனை எதிர்த்து பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் சாத்வீகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சாத்வீகப் போராட்டத்தில் திருக்கோவில் காரைதீவு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தவிசாளர்களான கே.ஜெயசிறில் இ.வி.கமலராஜன் மற்றும் பொத்துவில் பிரதேச சபை உப தவிசாளர் எஸ்.பார்த்தீபன் உறுப்பினர் ரீ.சுபோதரன் ஆகியோர் மக்களுடன் இணைந்து வீதியில் அமர்ந்து தமது எதிர்ப்பை தெரிவித்து இருந்துடன் பொத்துவில் பிரதேச சபையில் தவிசாளர் எம்.எச்.ஏ.றஹீமும் சம்பவ இடத்தில் பிரசன்னமாகி இருந்தார்.

இதனையடுத்து பொலிஸார் பொதுமக்களிடம் இரண்டு நாள் கால அவகாசம் கேட்டிருந்தனர். இதனையடுத்து பொது மக்கள் பௌத்த துறவிகள் மற்றும் அரசியல்வாதிகள் அங்கிருந்து கலைந்து சென்றதுடன் பொலிசார் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த புத்தர் சிலை அகற்றப்பட்டது. இருப்பினும் கம்பியிலான பீடம் மற்றும் பௌத்த கொடிகள் அகற்றப்படப்படவில்லை.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  எப்படி இந்த அதிசயம் நிகழ்கிறது?
Previous articleதென்னிந்தியப் படங்களில் நடிக்க விரும்புகிறேன்: ஆலியா பட்!
Next articleயாழில் பேருந்து விபத்து – மூவர் படுகாயம்