Home Astology இன்றைய ராசி பலன் – 13.12.2021

இன்றைய ராசி பலன் – 13.12.2021

பிலவ வருடம் கார்த்திகை 26 ஆம் தேதி டிசம்பர் 12,2021 ஞாயிற்றுக்கிழமை. நவமி திதி இரவு 08.03 மணி வரை அதன் பின் தசமி திதி. உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு 11.59 மணிவரை அதன் பின் ரேவதி. சந்திரன் இன்றைய தினம் மீன ராசியில் பயணம் செய்கிறார். சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

சந்திரன் இன்றைய தினம் விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். பெற்றோரிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். வேலையில் இருப்பவர்களுக்கு உடன் வேலை செய்பவர்களின் உதவி கிடைக்கும். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான எதிர்பார்த்த கடன் வாய்ப்புகள் சாதகமாக அமையும். மூத்த உடன்பிறப்புகளால் அனுகூலமான பலன்கள் ஏற்படும்.

ரிஷபம்

ரிஷபம்

சந்திரன் இன்றைய தினம் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே மனஸ்தாபங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்காலம் சார்ந்த செயல்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத சில மாற்றங்கள் உண்டாகும். அரசு வகையில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும்.

மிதுனம்

மிதுனம்

இன்று நீங்கள் எந்த ஒரு கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். சிலர் புதிய வாகனம் வாங்கி மகிழ்வார்கள். உறவினர்கள் வழியாக மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும். நிலுவையில் இருந்து வந்த பணம் கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத சில மாற்றங்கள் உண்டாகும். அரசு வகையில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

கடகம்

கடகம்

இன்று உங்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை நிலவும். உறவினர்கள் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் சற்று குறையும். மனதிற்கு விருப்பமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் சற்று நிதானம் வேண்டும். உத்தியோகம் சம்பந்தமான சில முக்கிய ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்வதை தவிர்க்கவும். பிறரின் செயல்பாடுகளில் இருக்கக்கூடிய குறைகளை கனிவுடன் சுட்டிக்காட்டவும்.

READ MORE >>>  இன்றைய ராசி பலன் - 29.11.2021
சிம்மம்

சிம்மம்

உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. எந்த ஒரு விஷயத்திலும் கவனம் தேவை. மனதில் எழும் தேவையற்ற சந்தேகங்களை தவிர்ப்பது நன்மையை அளிக்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் தோன்றி மறையும். உத்தியோகம் தொடர்பான பணிகளால் காலதாமதம் உண்டாகும். பயணங்களின் போது தேவையான ஆவணங்களை பத்திரமாக எடுத்துச் செல்லவும்.

கன்னி

கன்னி

இன்று உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை கூடும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வேலையில் உடனிருப்பவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் இருக்கவும். பூர்வீக சொத்துக்கள் சார்ந்த செலவுகள் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்தி அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். இலக்கியத்துறையில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு புதுவிதமான சிந்தனைகளும், செயல்பாடுகளும் உருவாகும்.

துலாம்

துலாம்

இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். உறவினர்கள் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புத்திரர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

ராசியில் மூன்று கிரகங்கள் கூடியுள்ளன. சந்திரன் ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று பிள்ளைகளால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பணவரவு நன்றாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் செய்தால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். கடன்கள் குறையும். புது வீடு கட்டுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் மேன்மைகள் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசியும், வழிகாட்டுதலும் கிடைக்கும். மனதில் இருக்கும் குழப்பங்களை நீக்கும்.

READ MORE >>>  இன்றைய ராசிபலன் - 05/11/2021, மகர ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்
தனுசு

தனுசு

இன்று குடும்பத்தில் உள்ளவர்களால் வீண் செலவுகள் அதிகரிக்கும். உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களால் செய்யும் முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கப்பெறுவீர்கள். பெண்கள் மனதிற்கு பிடித்த நகைகளை வாங்கி மகிழ்வீர்கள். பிடித்த இடத்திற்கு சென்று வருவதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். பயணங்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வேலையில் இருப்பவர்களுக்கு திறமைக்கேற்ற அங்கீகாரமும், முன்னேற்றமும் கிடைக்கும்.

மகரம்

மகரம்

இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். உடல் தோற்றப்பொலிவு மேம்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். எண்ண ஓட்டங்கள் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றமான சூழல் உண்டாகும். பெருந்தன்மையான செயல்பாடுகளால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். புதிய முயற்சிகளின் மூலம் பொருட்சேர்க்கை உண்டாகும்.

கும்பம்

கும்பம்

இரண்டாம் வீட்டில் சந்திரன் பயணம் செய்கிறார். உறவினர்களின் உதவியால் பணப்பிரச்சினை குறையும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும். பேச்சு வன்மையால் அனைவரையும் கவருவீர்கள். நிர்வாகம் சார்ந்த துறைகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களால் கலகலப்பான சூழல் ஏற்படும். புதிய நபர்களால் தனவரவும், புதுவிதமான அனுபவமும் உண்டாகும்.

மீனம்

மீனம்

இன்று உங்களுக்கு தனவரவு தாராளமாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். வேலையில் அலைச்சலும், பொறுப்புகளும் அதிகரிக்கும். உடல் சோர்வு நீங்கி உற்சாகம் அதிகரிக்கும். பயணங்களில் இருந்து வந்த களைப்பு நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். தேவையற்ற செலவுகளை குறைத்து சேமிப்பை அதிகப்படுத்துவதற்கான எண்ணங்கள் உண்டாகும்.

READ MORE >>>  இன்றைய ராசிபலன் 12-07-2021

ஏனைய தளங்களிற்கு செல்ல..

Previous articleஉணவு மிச்சம் வைத்ததற்கு 11 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்
Next articleமிதிவெடியில் சிக்கி சிறுவன் பலி