Home Local news கொவிட்19 தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்குத் தீர்மானம்

கொவிட்19 தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்குத் தீர்மானம்

பொது இடங்களுக்குள் செல்லும்போது கொவிட்19 தடுப்பூசி அட்டையை கொண்டுசெல்வதை கட்டாயமாக்குவதற்கு கொவிட்19 கட்டுப்பாட்டுக்கான விசேட செயலணி தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கொவிட்19 கட்டுப்பாட்டுக்கான விசேட செயலணி இன்று காலை கூடியபோது இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

கொவிட்19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக 2 வாரங்களுக்குள் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு செயலணி அங்கத்தவர்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

இதன்படி, 2 ஆவது கொவிட்19 தடுப்பூசி செலுத்தப்பட்டு 3 மாதங்கள் கடந்த அனைவருக்கும் பைஸர்-பயோஅன்டெக் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

தகுதியானவர்கள் நாளை சனிக்கிழமை முதுல் எந்தவொரு கொவிட்19 தடுப்பூசி நிலையத்திலும் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  சர்ச்சைக்குரிய நியமனம்; ராஜபக்க்ஷ அரசாங்கத்தின் நீதி குறித்த அலட்சியத்தின் மற்றுமொரு வெளிப்பாடு!
Previous article“SPOT PAID” என்ற புதிய முறைமை அறிமுகம்
Next article2008ம் ஆண்டுக்கு பின்னர் பிறந்தவர்களுக்கு வந்த தடை