Home Accident News யாழ் சென்ற பஸ் விபத்து – பல்கலைக்கழக மாணவி பலி – பலர் காயம்

யாழ் சென்ற பஸ் விபத்து – பல்கலைக்கழக மாணவி பலி – பலர் காயம்

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.

விபத்தின் போது பஸ் தடம் புரண்டு அருகில் உள்ள வயலுக்குள் பாய்ந்துள்ளது.

மதவாச்சிக்கும் இகிரிகொல்லாவக்கும் இடைப்பட்ட வளைவில் 145 வது மைல் கல்லிற்கு அருகில் உள்ள வளைவில் பஸ் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்தில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்தவர்கள் ரம்பேவ மற்றும் அனுராதபுரம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Gallery Gallery Gallery

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  மின்னல் தாக்கி ஒருவர் பலி; ஒருவர் படுகாயம்.
Previous articleவரவு செலவுத் திட்டம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்; தௌபீக் ஆதரவாக வாக்களிப்பு!
Next articleபஞ்சத்தின் காரணமாக ஒரு லட்சம் குழந்தைகளை கொல்ல முடிவு? திடுக்கிடும் தகவல்.