Home Tamil News நல்லூரிலும் வெடித்து சிதறியது எரிவாயு அடுப்பு

நல்லூரிலும் வெடித்து சிதறியது எரிவாயு அடுப்பு

யாழ்.நல்லூர் செல்வா வீதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்த எரிவாயு அடுப்பு இன்று (10) அதிகாலை வெடித்துச் சிதறியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், ஏறாவூரில் பொலிஸ் உத்தியோகத்தராக கடமை புரியும் மகன் நேற்றிரவு விடுமுறையில் வீட்டிற்கு வந்திருந்தார்.

இந்நிலையில் அவரது தாயார் அவருக்கு உணவு சமைத்துவிட்டு அடுப்பினை அணைத்துவிட்டு வெளியே வந்தார். இதன்போது சமையலறையில் பாரிய சத்தம் ஒன்று கேட்டது.

அதனைத் தொடர்ந்து அங்கு சென்று பார்த்தபோது எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறி காணப்பட்டது. இருப்பினும் இச்சம்பவத்தின் போது சேதங்கள் எவையும் ஏற்படவில்லை.

Gallery Gallery

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  இரணைதீவில் கவனயீர்ப்பு போராட்டம்
Previous articleஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் முழு விபரம்
Next articleமணமகளை அலங்கரிக்க சென்ற குழுவினருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!