Home Local news சர்ச்சைக்குரிய நியமனம்; ராஜபக்க்ஷ அரசாங்கத்தின் நீதி குறித்த அலட்சியத்தின் மற்றுமொரு வெளிப்பாடு!

சர்ச்சைக்குரிய நியமனம்; ராஜபக்க்ஷ அரசாங்கத்தின் நீதி குறித்த அலட்சியத்தின் மற்றுமொரு வெளிப்பாடு!

இதே போன்றதொரு நாளில் – சர்வதேச மனித உரிமைகள் தினத்துக்கு முதல் நாள் – 2011 டிசம்பர் 9ஆம் திகதி, அரசியல் செயற்பாட்டாளர்களான லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் காணாமலாக்கப்பட்டு இன்றோடு 10 வருடங்கள் ஆகின்றன.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய நபராக கருதப்படும் வசந்த கரணாகொடவிற்கு ராஜபக்க்ஷ அரசாங்கம் ஆளுநர் பதவி அளித்துள்ளமையானது மக்கள் மத்தியில் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

மகிந்த ஆட்சியின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரணாகொடவின் தனிப்பட்ட பாதுகாப்பு அலுவலராக கடமையாற்றியவேளைதான் ஹெட்டியாராச்சி உயர்மட்டத்தின் ஆசீர்வாதத்துடன் கடத்தல் குழு ஒன்றின் தலைவராகவும் இருந்தார்.

இவரதுகுழுதான் கம்பம் கோரும் வகையில் கொழும்பில் வசித்த செல்வந்த தமிழ் குடும்பங்களை சேர்ந்த இளைஞர்களை கடத்திச்சென்று கொழும்பிலுள்ள ‘பிட்டு பம்புவ’ கடற்படைச் சிறையில் தடுத்து வைத்தது.

அதன் பின்னர் பேரங்கள் படியாததால் திருகோணமலை கடற்படைத் தளத்துக்கு அவர்களை கொண்டுசென்று அங்குள்ள இடத்தில் வைத்துக் கொலை செய்ததாக அப்போது தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்தக்குழு கடத்திய தமிழர்களின் எண்ணிக்கை 11 என கூறப்பட்டாலும் உண்மையான தொகை அதனைவிட அதிகமென கூறப்படுகிறது. 2018 கொழும்பில் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டமை தொடர்பான விசாரணையில் இருந்து பாதுகாப்பதற்காக, சிறிலங்கா கடற்படையின் உயர்மட்டம் முயற்சி செய்த தகவலும் அம்பலமாகியிருந்தது.

5 மாணவர்கள் உட்பட 11 பேரை கடத்திச்சென்று, அவர்களுடைய பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கப்பம் கேட்டு அச்சுறுத்தி, கடைசியில் அவர்கள் அத்தனைப் பேரையும் காணாமலாக்கிய கொடூர சம்பவமும் இலங்கை ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஒன்றும் புதிதல்ல.

இறுதி யுத்த காலப்பகுதியில் வழமையாக இருந்த புலனாய்வுப் பிரிவிற்கு மேலதிகமாக விசேட புலனாய்வுப் பிரிவொன்றை முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட உருவாக்கியிருந்தார்.

இந்த இரு பிரிவுகளையும் நிர்வகிக்கும் பொறுப்பை தஸநாயக்கவே கொண்டிருந்தார். வழமையான புலனாய்வுப் பிரிவு கொழும்பைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கியது. அதற்கு நேவி சம்பத் என்றழைக்கப்படும் கமான்டர் பிரசாத் சந்தன ஹெட்டி ஆரச்சி தலைமை தாங்கினார்.

READ MORE >>>  வாகன விபத்து; மரத்தின் கிளை குத்தியதால் சாரதி ஸ்தலத்தில் பலி

விசேட புலனாய்வுப் பிரிவு, திருகோணமலை கடற்படை முகாமில் செயற்பட்டுவந்தது. இளைஞர்கள் கடத்தப்பட்டு தடுத்துவைக்கப்பட்டமை தொடர்பாக இந்த இரு பிரிவுகளையும் சேர்ந்த அதிகாரிகள் அறிந்திருந்தனர். எனினும் அது தொடர்பிலான தகவல்கள் வெளிப்படுத்தப்படவில்லை.

கொழும்பில் வைத்து கடத்தப்பட்ட அப்பாவிகள் 11 பேரும் முதலில் சைத்திய வீதியில் உள்ள கடற்படை பராக்கிர நிறுவனத்தின் ‘பிட்டு பம்பு’ என்று அழைக்கப்படும் கட்டடத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.

அதன் பின்னர் திருகோணமலை டொக்யார்ட் முகாமில் உள்ள நிலக்கீழ் சிறைச்சாலையான ‘கன்சைட்’ இல் தடுத்துவைக்கப்பட்டனர். அங்குவைத்துதான் இவர்கள் அனைவரும் காணாமலாக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சர்ச்சைக்குரிய நபர் ந் காணாமல்போனோர் தொடர்பான சம்பவத்தை விசாரிக்க 15.06.2010 அன்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷவிடம் பொலிஸார் அனுமதி கேட்டிருந்தனர்.

இந்தக் கலந்துரையாடல் தொடர்பாக சிஐடியின் பணிப்பாளர் எம்.கே.டீ.டபிள்யூ. அமரசிங்க இவ்வாறு தனது அறிக்கையில் குறிப்பிட்டுகையில்,

“இன்றைய தினம் விசாரணை இல. C267/09/CM இல் உள்ளடங்கியுள்ள கடத்தல் தொடர்பாக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கீர்த்தி கஜநாயக்க மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் கபில ஹென்தவிதாரணவுடன் பாதுகாப்புச் செயலாளர் கலந்துரையாடியிருக்கிறார்.

அதன் பின்னர் இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி தன்னிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கூறினார். அதன் படி விசாரணை தொடர்பாக திட்டமொன்றை தயாரித்து, விசாரணையின் முன்னேற்றம் குறித்து 15.07.2010 அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதன் மூலம் தெரியவருவது என்ன? அவர்களின் தலைவர்களில் ஒருவரான கோத்தபாயவே இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு முதலில் அனுமதியை வழங்கியிருக்கிறார்.

அதேபோல, 2009ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் திகதி அப்போதைய கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்தே இந்தக் கடத்தல் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. தன்னுடைய சிரேஷ்ட அதிகாரியான சம்பத் முணசிங்க விடுதலைப் புலிகள் அமைப்பினருடன் தொடர்புபட்டிருக்கிறார் என தனக்கு சந்தேகம் இருப்பதால் விசாரணை நடத்துமாறு கரன்னாகொட தனது முறைப்பாட்டில் தெரிவித்திருக்கிறார்.

READ MORE >>>  “ஒரே நாடு - ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணிக்கு தமிழர்கள் மூவர் நியமனம்.

அதற்கு முன்னர் கடற்படையின் ஒழுக்க விடயம் தொடர்பான அதிகாரியொருவர் சம்பத் முணசிங்கவின் இல. 8 உத்தியோகபூர்வ இல்லத்தில் சோதனை நடத்தியிருந்தார். இதன்போது ஒரு கடவுச் சீட்டும், நான்கு அடையாள அட்டைகள், 450 துப்பாக்கி ரவைகள், கைத்தொலைப்பேசியொன்று மற்றும் உறுதிமொழிப் பத்திரமும் மீட்கப்பட்டிருந்தன.

அடையாள அட்டைகள் மற்றும் கடவுச் சீட்டு தொடர்பில் தேடிப்பார்த்தபோது அவை கொழும்பில் காணாமல்போனவர்களுடையது என கண்டறிப்பட்டது. விசாரணையின் தொடர்ச்சியாக கடத்தப்பட்ட ஐந்து பேர் உட்பட இன்னும் பலர் தொடர்பான தகவல்களும் தெரியவந்துள்ளது. கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி 28 பேர் காணாமலாக்கப்பட்டிருந்தமை கண்டரியப்பட்டது.

கஸ்தூரி ஆரச்சிலாகே அன்டன், கஸ்தூரி ஆரச்சிலாகே ஜோன் ரீட், தியாகராஜா ஜெகன், ரஜீவ் நாகநாதன், பிரதீப் விஸ்வநாதன், திலகேஸ்வரன் ராமலிங்கம், மொஹமட் நிலான், மொஹமட் சாஜித், சூசைப்பிள்ளை அமலன் லியோன், சூசைப்பிள்ளை ரொஷான் லியோன் மற்றும் அலி அன்வர் ஆகியோரே கப்பம் பெறும் நோக்கில் கடத்தப்பட்டிருக்கிறார்கள்.

கடத்தப்பட்டவர்களில் அலி அன்வர் எனப்படும் ஹாஜியார் கடற்படையினருக்கு உளவுபார்த்தவர் என்பதோடு பணவசதி உள்ளவர்கள் தொடர்பாக கடற்படையின் கடத்தல் குழுவுக்கு தகவலும் வழங்கியிருக்கிறார்.

கடைசியில் தகவல்களை வெளியிடக்கூடும் என்ற அச்சத்தில் அவரையும் கடத்தி காணாமலாக்கியுள்ளார்கள். இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக நேரில் கண்ட பலரிடம் சிஐடியினர் விசாரணை நடத்தியிருக்கின்றனர். அவை வாக்குமூலங்களாக இல்லாவிட்டாலும் அந்தத் தகவல்களைக் கொண்டு கொடூர சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என்பதை ஊகித்துக் கொள்ளக்கூடியதாக இருக்கிறது.

திருகோணமலை, ‘கன்சைட்’ நிலக்கீழ் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்களை தாங்கள் கண்டனர் என கடற்படை அதிகாரிகள், சிப்பாய்கள் கூறியிருக்கிறார்கள். அவர்களுக்கு உணவு, தண்ணீர் வழங்கியவர்கள், மலசலகூடத்திற்கு, குளிப்பதற்கு வரும்போது கண்டவர்கள் அதில் அடங்குவர். அதன் பின்னர், இந்த சிறைக்கூடத்திலிருந்து கறுப்புப் பொலிதீன் பைகளில் சடலங்கள் கொண்டுசெல்லப்பட்டதைக் கண்டவர்களும் சிஐடினிரின் விசாரணையின்போது தெரிவித்திருக்கின்றனர்.

READ MORE >>>  முற்சக்கரவண்டிகளுக்கு புதிய நடைமுறைகள் அமுல்!

தெஹிவளை பகுதியில் வைத்து கடத்தப்பட்ட இளைஞர்கள் பயணித்த கறுப்பு நிறத்திலான டாடா இன்டிகா ரக கார் திருகோணமலை முகாம் பிரதானி ரணசிங்கவின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு அருகிலும் முகாமின் வாகனம் திருத்தும் நிலையத்திலும் இருந்துள்ளதையும் பலரும் கண்டுள்ளனர். பின்னர் அந்த வாகனம் துண்டு துண்டாக வெட்டப்பட்டு நிலக்கீழ் அறையொன்றில் குவித்துவைக்கப்பட்டிருந்ததையும் கண்டிருக்கிறார்கள்.

வெள்ளை வானை அனுப்பி கடத்தலில் ஈடுபடுவது கோத்தபாய ராஜபக்‌ஷவின் குற்றங்களைத் தடுப்பதற்காக ஒரு வழியுமாகவிருந்தது. இந்த வெள்ளை வான் குற்றங்கள் குறித்து அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் உள்ள அனைவரும் அறிந்திருந்தார்கள்.

இந்த வெள்ளை வான்களில் தீவிரவாதிகளை கடத்திச் சென்றதாக அவர்கள் கூறுகிறார்கள். அதை குற்றமாகவே அவர்கள் கருதவில்லை. அரசாங்கத்தின் மூலோபாயமாக இவ்வாறான கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றபோதிலும் அதன் பின்னணியில் இன்னும் பல விடயங்கள் அரங்கேறியிருக்கின்றன. அரசாங்கத்தில் உயர் அந்தஸ்துடன் இருந்தவர்கள் தங்களுடைய தனிப்பட்ட விருப்பு வெருப்புக்கு அமைய தேவையானவர்களைக் கடத்தி காணாமல் செய்திருக்கின்றனர்.

அந்தப் பட்டியலில் ஊஅடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவும் இருக்கிறார். இந்த வெள்ளை வான் மூலம் தாங்களும் ஏதாவது செய்துகொள்ள வேண்டும் என சிந்தித்த இராணுவத்தினர் சிலரும் , மக்களை கடத்தி கப்பமும் பெற்றிருக்கிறார்கள்.

இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக நீதியாக விசாரணை நடத்தி, மக்களுக்கு உண்மையைத் தெரியப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஆனால் அவ்வாறு எதுவும் செய்யாது முக்கிய குற்றவாளியை இன்று ராஜபக்க்ஷ அரசாங்க்கம் முக்கிய பதவியொன்றை வழங்கியுள்ளது.

இந்த நிலையில் ராஜபக்க்ஷ குடும்ப  அரசாங்கத்தின் நீதி குறித்த அலட்சியத்தின் மற்றுமொரு வெளிப்பாடு   இதனூடாக  புலப்படுகின்றது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

Previous articleசர்சைக்குரிய வசந்த கரன்னாகொட ஆளுநரானார்;
Next articleவாகனங்களை இறக்குமதி செய்ய முடியாது