Home Indian news பொலிஸார் பலருக்கு காதல் வலை விரித்து பல லட்சம் மோசடியில் ஈடுபட்ட பெண்:

பொலிஸார் பலருக்கு காதல் வலை விரித்து பல லட்சம் மோசடியில் ஈடுபட்ட பெண்:

தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் பேஸ்புக் பக்கத்தில் இளம் ஆண் பொலிஸார் பலரை குறிவைத்து திருமண ஆசைக்காட்டி லட்சக்கணக்கில் பணமோசடி செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

200க்கும் மேற்பட்ட பொலிஸார் இவரது முகநூல் வலையில் சிக்கியிருப்பது தெரியவந்துள்ளது. மோசடிப் பெண் சிக்கியது எப்படி?

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் 25 வயதான பாரதி ராஜா. இவர் மணிமுத்தாறில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் சிறப்பு காவலராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 3 மாதங்களாக சென்னை திருவொற்றியூரில் உள்ள கடலோர காவல் படையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஜனவரி 27ஆம் திகதி பாரதிராஜாவின் முகநூல் பக்கத்தில் ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதியைச் சேர்ந்த 26 வயதான ஐஸ்வர்யா என்பவர் பெண் நண்பராக அறிமுகமானார். நாளடைவில் இவர்களின் முகநூல் நட்பு காதலாக மலர்ந்துள்ளது

தான் மருத்துவம் படிப்பதாக கூறிய அந்தப் பெண் அடிக்கடி செல்போன் மூலமாக பேசியும், முகநூல் மற்றும் வாட்ஸ்அப் மூலமாக செட் செய்தும் வந்துள்ளார். மேலும் அவர் பொலிஸாரான பாரதிராஜாவை திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இந்நிலையில், தன்னுடைய மருத்துவ படிப்பிற்கு பணம் தேவைப்படுவதாக கூறி பாரதிராஜாவிடம் கேட்டுள்ளார். தனது தந்தை பழனியின் வங்கி கணக்கில் பணத்தை செலுத்துமாறு கூறி படிப்படியாக பாரதிராஜாவிடம் இருந்து 14 லட்சம் ரூபாவை ஏமாற்றி பெற்றிருக்கிறார்.

இதற்கிடையே, பாரதிராஜாவின் உறவினரான மகேந்திரன் என்பவரிடம் முகநூல் பக்கத்தில் மற்றொரு பெண் போல் ஐஸ்வர்யா பழகியுள்ளார். பின்னர் மகேந்திரனை ஏமாற்றி, 20 லட்சம் ரூபாவை தந்தையின் வங்கி கணக்கு மூலம் ஐஸ்வர்யா பெற்றுள்ளார்.

READ MORE >>>  முதலிரவு பற்றி பேசியதால் சர்ச்சையில் சிக்கிய நடிகை!

மேலும், மகேந்திரன் மூலமாக ஒரு பவுண் தங்க நகை, ஒரு ஜோடி வெள்ளி கொலுசு ஆகியவற்றை ஏமாற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக பாரதிராஜா, மகேந்திரன் ஆகிய இருவரிடமும் பேசுவதை ஐஸ்வர்யா நிறுத்திவிட்டார் .

ஐஸ்வர்யா குறித்து விசாரித்த போதுதான் தெரிந்தது. பெண் ஒருவர் தங்களை ஏமாற்றி பணம் பறித்தது. சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பாரதிராஜா புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் ஆவடி காவல் துணை ஆணையர் சத்தியமூர்த்தி தலைமையிலான தனிப்படை பொலிஸார் தீவிர விசாரணை நடத்தினர்.

ஐஸ்வர்யாவின் செல்போன் எண்களைக் கொண்டு அவரது இருப்பிடத்தை கண்டுபிடித்த பொலிஸார், ஐஸ்வர்யா மற்றும் அவரது தாய், தந்தை ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில் ஐஸ்வர்யா ஆவடி வீட்டு வசதி வாரிய பகுதியில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

ஒரு செல்போன் மற்றும் லேப்டாப்பை வைத்து கொண்டு தான் பங்கு சந்தையில் முதலீடு செய்து அதன் மூலம் பணியாற்றி வருவதாக தாய் தந்தையிடம் பொய் கூறியுள்ளார்.

முகநூலில் ஆண் நண்பர்களிடம் தொடர்ந்து பண வசூல் வேட்டையில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.

அவரது முகநூல் பக்கத்தை ஆராய்ந்ததில், இளம் பொலிஸாரை மட்டுமே நண்பர்களாக்கி அவர்களிடம் தான் காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

பாரதிராஜா மற்றும் மகேந்திரனிடம் மோசடி செய்த 34 லட்ச ரூபாய் பணத்தில் அந்த பெண் ஆடம்பரமாக வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

READ MORE >>>  ஒரு முத்த காட்சிக்கு 50 லட்சம் ரூபா வாங்கிய அனுபமா?

அவருடைய முகநூல் கணக்கில் சுமார் 200 பொலிஸார் நண்பர்களாக உள்ள நிலையில் யார் யாரிடம் மோசடி செய்துள்ளார் என்பதை பொலிஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இளம் ஆண் பொலிஸாரை குறி வைத்து, இளம் பெண் ஒருவர் பல லட்சம் ரூபா மோசடி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

Previous articleஹீரோயினாக மாறும் அஜித்தின் ரீல் மகள் அனிகா
Next articleஇளைஞர், யுவதிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்!